யாரு சாமி நீ..? இந்தியன் 2 படத்தை 15 முறை பார்த்த கமல் வெறியன்.. ரொம்ப தைரியம்தான்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலான படமாக அமைந்தது. இந்த படம் திட்டமிட்டதைவிடவும் முன்னதாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தினை இணையவாசிகள் சரமாரியாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தினை 15 முறை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்த கமல்ஹாசனின் தீவிர ரசிகர், உதய பாரதியை ஃபிலிமி பீட் தமிழ் யூட்டூப் குழு தேடிப்பிடித்து பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அந்த பேட்டியில் உதய பாரதி பேசியதாவது, சிலருக்கு கோவிலுக்குப் போனால் எப்படி மன அமைதி கிடைக்குமோ, அதுபோல எனக்கு கமல்ஹாசன் படங்களை தியேட்டரில் பார்த்தால் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தினருடன் செல்வேன். யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். அவர்களுக்கு வர விருப்பம் இல்லை என்றால் தொந்தரவு செய்யமாட்டேன். நான் அவருடைய தீவிர ரசிகர் என கமல்ஹாசன் சாருக்கே தெரியும். விஸ்வரூபம் படத்தை 60 முறை பார்த்திருக்கின்றேன். விக்ரம் படத்தினை 51 முறை பார்த்துள்ளேன். விஸ்வரூபம் பார்க்கும்போது அதனை உலகசாதனையாக பதிவு செய்யவேண்டும் என்ற ஐடியா எல்லாம் இல்லை.

கமல்ஹாசன்: விக்ரம் படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் கமல்சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆனால் அதற்குள் வேறு ஏதோ சமூக பிரச்னை வரவே, கமல்சாரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இதுவரை கமல் சாரை ஐந்தில் இருந்து ஆறு முறை சந்தித்துள்ளேன். அவரை முதன்முதலாக 2003ஆம் ஆண்டு அன்பே சிவம் படம் ரிலீஸின்போது உடல்தானம் செய்தார் அப்போது சந்தித்தேன். அவரைச் சந்தித்தபோது ஸ்ருதிஹாசன் சிறிய குழந்தை.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை: நானும் எனது தம்பியும் அவருடன் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தோம். அப்போது, அவருடைய கண்கள் மற்றும் உதடுகளைப் பார்த்து எனது தம்பி பயந்துவிட்டார். நானுமே பயந்துவிட்டேன். இந்தியன் 2 படத்தினைப் பொறுத்தவரையில் நான் மற்ற ரசிகர்களைப் போல் படம் மிகவும் சூப்பராக உள்ளது. படம் ப்ளாக்பஸ்டர் என்று கூறமாட்டேன். ஆனால் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதேநேரத்தில் படத்தில் எதுவுமே இல்லை, படம் குப்பை எனக் கூறும் அளவிற்கு படம் அந்த அளவிற்கு மோசம் இல்லை.
பிரச்னை: படத்தில் பிரச்னை என்னவென்றால், படத்தினை இரண்டாகப் பிரித்ததுதான். படத்தின் இடைவெளி வரை பார்த்துவிட்டு வெளிவந்த ஆடியன்ஸ்க்கு என்ன உணர்வு இருக்குமோ அதுதான் படம் பார்த்த பலருக்கு இருக்கின்றது. ஷங்கர் இந்தப் படத்தினை வேறு பெயரில் எடுத்திருந்தால் ஓடியிருக்கும். இந்தியன் படத்தினையும் இந்தியன் 2 படத்தினையும் ஒப்பிட்டுபார்க்கின்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல் பஹேட்டர்ஸ் படம் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே சமூக வலைதளங்களில் செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

அம்மா திட்டுவாங்க: ஒரு படத்தை ஒரு முறை பார்த்தால் போதாதா என எனது அம்மா மிகவும் காட்டமாக திட்டுவார்கள். ஒருகட்டத்தில் அவர்களுமே என்னைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். மேலும் நாங்கள் எல்லா படங்களுக்கும் இப்படி போவதில்லை. மாறாக, கமல் சார் படத்திற்கு மட்டும்தானே இப்படி போகின்றோம் என அம்மா புரிந்துகொண்டார்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











