Mari Selvaraj: தேவர் மகன் தான் சாதிய வெறியை தூண்டிச்சா.. மாரி செல்வராஜை விளாசும் கமல் ரசிகர்கள்!

சென்னை: தேவர் மகன் படம் தான் தமிழ் சினிமாவில் சாதிய வெறியை தூண்டியது என்கிற ரீதியில் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் முன்னிலையிலே பேசியது கமல் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு சொன்னார், எல்லாரும் லஞ்சம் வாங்காமலா இருக்காங்க என்றும் தொடர்ந்து கமலை மட்டுமே டார்கெட் செய்து மாரி செல்வராஜ் பேசுவது சரியில்லை என கமல் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

 Kamal Haasan fans blasts Mari Selvarajs speech against Kamal Haasans Devar Magan

மேலும், அந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசுவதை அத்துனை அமைதியுடன் கேட்டுக் கொண்டு இருந்த கமல் தங்கம் சார் என்றும் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி எஸ்கேப்: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என மாமன்னன் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் உள்ள ஜாம்பவான்களை எல்லாம் ஆடியோ வெளியீட்டுக்கு அழைத்தனர். ஆனால், ரஜினிகாந்த் இதில், உள்ள சிக்கலை புரிந்துக் கொண்டே எஸ்கேப் ஆகி விட்டார் எனக் கூறப்படுகிறது.

ஆனால், கமல்ஹாசன் கலை தாகத்தால் அந்த விழாவுக்கு சென்ற நிலையில், மாரி செல்வராஜ் வசமாக சிக்கியவரை மேடையிலேயே வைத்து அசிங்கப்படுத்தி விட்டதாக கமல் ரசிகர்க்ள் கொந்தளித்துள்ளனர்.

 Kamal Haasan fans blasts Mari Selvarajs speech against Kamal Haasans Devar Magan

தேவர்மகனை கிழித்து: "போற்றிப் பாடடி பெண்ணே.. இது தேவர் காலடி மண்ணே" என பாடல் வைத்து சாதிய பெருமையை வளர்த்து விட்டதால் இன்னமும் இசக்கிகள் முன்னேற முடியாமல் இருக்கின்றனர்.

தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கினேன், தேவர் மகன் பார்த்து விட்டுத் தான் கர்ணன் மற்றும் மாமன்னன் படத்தையும் இயக்கி உள்ளேன். தேவர் மகன் இசக்கி தான் இந்த மாமன்னன் என்று சொல்லி கமல்ஹாசனை டோட்டலாக காலி செய்து விட்டார் மாரி செல்வராஜ்.

கடுப்பான கமல் ரசிகர்கள்: ஆனால், கமல்ஹாசன் நிதானமாக அந்த விழாவில் கஷ்டங்களை மனதிற்குள்ளே புதைத்துக் கொண்டு சிரித்த முகத்துடனே படத்தை பாராட்டி பேசியதை கவனித்த ரசிகர்கள், தற்போது சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜுக்கு எதிராக மீம்களையும் எதிர்ப்பு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

"என்னமோ தேவர்மகன்ங்கிற ஒரே ஒரு படம் மட்டுமே சாதிய மோதலையோ சாதிய வெறியையோ தூண்டுச்சுங்கிற மாதிரி அரவேக்காட்டுத்தனமான பேச்சு! 'நீங்க மாறுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது'ன்னு நீங்க எடுத்த பரியேறும் பெருமாள்ங்கிற ஒரு படத்துனால எல்லாரும் திருந்திட்டானுங்களா?" என கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர்.

 Kamal Haasan fans blasts Mari Selvarajs speech against Kamal Haasans Devar Magan

பாபநாசம் பற்றி மாரி செல்வராஜ் பேச்சு: பாபநாசம் படத்தில் வீடியோ எடுத்ததற்காக அந்த பையனை கொன்னுட்டாங்க என்றும் உன்னைய வீடியோ எடுத்ததற்காக அந்த பையன் தான் வெட்கப்படணும்னு கமல் எங்கேயும் சொல்ல.. மேலும், மறுபடியும் அந்த பொண்ணை வீடியோ எடுத்தா இவரு காப்பாத்திட்டே இருப்பாரான்னு கேள்வி வேற.. அந்த படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது கூட மாரி செல்வராஜுக்கு தெரியலையா? ரீமேக் படத்தில் கதையை எப்படி சார் மாத்த முடியும் என கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜுக்கு ஆரம்பத்தில் இருந்தே கமல் மீதான வெறுப்பை எடுத்துக் கூறி தீட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாபநாசமே புரியாது: அய்யய்ய.. மாரிக்கு பாபநாசமே புரியாது.. இதுல 30 வருஷத்துக்கு முன்னாடி வந்த தேவர் மகன் திரைப்படம் புரிந்த மாதிரி தான் என்றும் மீம்களை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கமல் ரசிகர்களும் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு இடையேயும் பெரிய பஞ்சாயத்து வெடித்துள்ளது. இது இந்த படத்திற்கு ஃப்ரீ ப்ரமோஷன் தான் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X