என்ன பெரிய பொல்லாத ஜோக்கரு.. இதையெல்லாம் எங்க ஆண்டவரு 23 வருஷம் முன்னாடியே பண்ணிட்டாரு!

சென்னை: ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜோக்கர் 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஜோக்கர் 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஜோக்கர் 2 டீசரின் கடைசியில் வரும் காட்சியை ஹாலிவுட் ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், என்ன பெரிய ஜோக்கரு, இதையெல்லாம் எங்க ஆண்டவர் கமல்ஹாசன் 23 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிவிட்டார் என கமல் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Kamal Haasan fans compares Aalavandhan and Joker 2 scene vows fans

அன்றே கணித்தார் சூர்யா போல அன்றே கணித்தார் ஆண்டவர் என்றும் சோஷியல் மீடியாவில் ஜோக்கர் படத்தை வைத்து புதிய விவாதமே நடைபெற்று வருகிறது.

ஜோக்கர் 2 டீசர்: டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா நடிப்பில் பிரம்மாண்டமாக ஹாலிவுட்டில் உருவாகி உள்ள ஜோக்கர் 2 டீசர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. கடந்த ஆண்டு எப்படி ஆஸ்கர் விருதுகளை ஓபன்ஹெய்மர் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் அந்த படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளியதோ அதே போல இந்த ஆண்டு வெளியாக உள்ள ஜோக்கர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கரில் ஆட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் ரிலீஸ்: ஜோக்கர் 2 திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக காத்திருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமிழ் டீசருடன் இன்று வெளியாகி விட்டது. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஜோக்கர் 2 படம் அமையுமா? என்கிற கேள்விகளும் சினிமா உலகில் எழுந்துள்ளது.

Kamal Haasan fans compares Aalavandhan and Joker 2 scene vows fans

கடைசி சீன்: ஜோக்கர் 2 டீசரின் கடைசி சீனில் லேடி காகா கண்ணாடியில் வரையும் ஸ்மைலிக்கு சரியாக பொருந்துவது போல ஜோக்கின் பீனிக்ஸ் சிறைக்குள் இருந்தபடி முகத்தை திருப்பும் காட்சி ரசிகர்களை கூஸ்பம்பஸ் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இதையெல்லாம் எங்க ஆண்டவரு 23 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டாரு போவியான்னு கமல்ஹாசன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஆளவந்தான் படத்திலேயே: மஞ்சுமெல் பாய்ஸ் படம் உருவாக 33 ஆண்டுகளுக்கு முன்பாக குணா படத்தை கமல்ஹாசன் நடித்து வைத்த நிலையில், தற்போது ஜோக்கர் 2 படத்தில் இடம்பெற்ற சீனை 23 ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் ஆளவந்தான் படத்திலேயே செய்து அசத்தி விட்டார் என ரசிகர்கள் அந்த காட்சியை ஷேர் செய்து வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

ஜோக்கருக்கெல்லாம் ஜோக்கர்: நெகட்டிவ் கதாபாத்திரத்தை கொண்டாடுவார்களா என ரசிகர்கள் நினைக்காத காலத்தில் ஆளவந்தான் படத்தை கமல்ஹாசன் எடுத்திருந்தார். ஆனால், அப்போது அந்த படம் ஓடவில்லை. ஆனால், ஜோக்கருக்கெல்லாம் ஜோக்கர் ஆளவந்தான் தான் என்றும் ஆளவந்தான் திரைப்படத்தை பார்த்து கில் பில் உருவானதை போல தற்போது ஜோக்கர் படத்தின் காட்சியும் ஆளவந்தான் இன்ஸ்பிரேஷனாக உருவாகி இருக்கலாம் எனக் கூறுகின்றனர். மீசை மற்றும் இரண்டு கண்கள் என ஆளவந்தான் சிக்னேச்சர் அப்போதே ரசிகர்களை மிரள வைத்த நிலையில், ஜோக்கர் 2 படத்திலும் அதே போன்ற ஒரு சீன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X