69 வயதில் ஆண்டவர் ஆட்டம் வெறித்தனம்.. இந்தியன் 2, 3, தக் லைஃப், கல்கி 2ன்னு வரிசையா வருதே!
சென்னை: 81 வயது அமிதாப் பச்சனும் 69 வயது கமல்ஹாசனும் தான் பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்திற்கு மிகப்பெரிய தூணாக உள்ளனர். கல்கி படம் முதல் நாளே 200 கோடி வரை வசூல் நெருங்கியதாக கூறப்படும் நிலையில், கமல்ஹாசன் மற்றும் கமல் ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய கொண்டாட்ட படமாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த கொண்டாட்டத்துக்கு லால் சலாம் படம் மூலமாக வேட்டு வைத்து விட்டார்.

ஆனால், அடுத்து வேட்டையன் மற்றும் கூலி என 2 தரமான சம்பவங்கள் காத்துக்கிடக்கின்றன. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாஸ் காட்டும் கமல்ஹாசன்: இப்படி ஒரு பக்கம் ரஜினிகாந்த் இந்த வயதிலும் அடுத்தடுத்து பெரிய படங்களை கொடுத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கமல்ஹாசன் அதிரடி கிளப்பி வருகிறார். கல்கி 2898 ஏடி படத்தில் சுப்ரீம் யாஷ்கின் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் 2 காட்சிகளில் மட்டுமே கமல்ஹாசன் வந்தாலும், அவருடைய பாடி லேங்குவேஜ், டயலாக் மாடுலேஷனில் வித்தியாசம் காட்டுவது என மிரட்டி விட்டுள்ளார்.
கடைசி சீன் வெறித்தனம்: காண்டீப வில்லை கையில் ஏந்தி கமல்ஹாசன் கடைசி கிளைமேக்ஸில் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனம் என கமல்ஹாசன் ரசிகர்கள் அந்த காட்சியின் வீடியோக்களையும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். கல்கி படம் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியன் 2 படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
வரிசை கட்டும் படங்கள்: கல்கி முதல் பாகத்தில் கமல்ஹாசன் 2 காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வெறித்தனம் காட்டி செல்கிறார். 2ம் பாதியில் இவருக்கு ஏகப்பட்ட ஆக்ஷன் சீக்வென்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி படத்தை தாண்டி இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் என வரிசையாக கமல்ஹாசனுக்கு பல படங்கள் லைன் அப்பில் உள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். பீக்கில் இருக்கும் போது கூட கமல்ஹாசன் அடுத்தடுத்து இத்தனை பெரிய படங்கள் விடவில்லை என்றும் 69 வயதில் ஆண்டவர் ஆட்டம் வெறித்தனமா இருக்கே என வியந்து போய் பார்த்து வருகின்றனர்.
மெகா ட்ரீட்: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய வெர்ஷனாகவே உலக நாயகன் மாறி வந்திருக்கிறார் என்றும் 2 சீனே கல்கி படத்தில் தெறிக்கிறதே, இந்தியன் 2வில் தசாவதாரம் கமல் போல பல கெட்டப்புகளில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தப் போகிறார். மேலும், லோகேஷ் கனகராஜின் எல்சியூவான விக்ரம் 3 உள்ளிட்ட படங்களும் கமல்ஹாசனை எங்கேயோ கொண்டு செல்லப் போகப் போகிறது. எது எப்படியோ தொடர்ந்து ஆண்டவர் தரிசனம் ரசிகர்களுக்கு கன்ஃபார்ம் என கமல்ஹாசன் ரசிகர்கள் ஏகப்பட்ட போஸ்ட்டுகளை கல்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











