இந்தியன் 3 படத்தோட கதையா?.. விஜய் தேவரகொண்டா ‘ரணபலி’ க்ளிம்ப்ஸ் பார்த்து ஷாக்கான கமல் ரசிகர்கள்?

சென்னை: லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான இந்தியன் 3 திரைப்படம் இன்னமும் முழுமையாக முடிக்கப்படாமல் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்தியன் 2 படத்தின் படுதோல்விக்குப் பிறகு இந்தியன் 3 படத்துக்காக செலவு செய்ய லைகா தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

இந்தியன் தாத்தாவின் அப்பா, அம்மா கதையாக இந்தியன் 3 படத்தின் போஸ்ட் கிரெடிட் சீன் இந்தியன் 2 படத்தின் இறுதியில் வெளியானது. அதில், வீரசேகரன் சேனாபதி என கமல்ஹாசன் பெரிய மீசை எல்லாம் வைத்துக் கொண்டு குதிரையில் ரயிலில் செல்லும் வெள்ளைக்காரர்களை வேட்டையாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன.

Kamal Haasan fans shocks after Vijay Deverakonda Ranabaali looks like Indian 3 both are same story

இந்நிலையில், நேற்று வெளியான விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி அப்படியே இந்தியன் 3 படத்தை நினைவுப்படுத்தும் விதமாக இருப்பதாக கமல் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

ஆக்‌ஷன் ஹீரோவா ஆகணும்: விஜய் தேவரகொண்டா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தில் ரக்ட் பாயாக அவர் நடித்திருந்தாலும், காதல் கதை தான் அந்த படத்துக்கு பெரியளவில் கை கொடுத்தது. ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த கீத கோவிந்தம் படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அவர் சமீப காலமாக கிங்டம், ரெளடி ஜனார்த்தனா என ஆக்‌ஷன் ஹீரோவாகவே நடித்து வரும் நிலையில், ரணபலி படமும் அதே பாணியில் தான் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா தொடர்ந்து பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிக்காக போராடி வந்தாலும், அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறது.

Kamal Haasan fans shocks after Vijay Deverakonda Ranabaali looks like Indian 3 both are same story

இந்தியன் 3 கதையா?: நேற்று வெளியான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் ரணபலி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்கள் இது அப்படியே இந்தியன் 3 படம் போல இருக்கே பாஸ் என சர்ச்சையை கிளப்பி உள்ளனர். சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியன் தாத்தா சேனாபதி போராடிய காட்சிகளை இந்தியன் படத்தில் பார்த்திருந்தோம். ஆனால், இந்தியன் 3 படத்தில் அவருக்கு முன்னதாக அவருடைய அப்பா வீரசேகரன் போராடிய கதையை ஷங்கர் எடுத்துள்ளார். இந்நிலையில், அதே சாயலில் இந்த ரணபலி க்ளிம்ப்ஸ் உள்ள நிலையில், இரண்டும் ஒரே கதையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஷங்கர் கேஸ் போடுவாரா?: ஏற்கனவே வேள்பாரி கதையில் உள்ள காட்சிகள் மற்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உருவப்பட்டு வெளியாவதை கண்டித்து பேசியிருந்த ஷங்கர் இந்த படத்தின் கதை குறித்து ஆராய்ந்து கேஸ் போடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் 3 இந்த ஆண்டு வருவதற்உ வாய்ப்பில்லை. ஆனால், செப்டம்பர் மாதம் ரணபலி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டும் ஒரே கதையாக இருந்தால் இந்தியன் 3 படத்துக்கு மேலும், பாதிப்பு தான் என்கின்றனர்.

இதுவேற கதை: ஆனால், கண்டிப்பாக விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்படம் இந்தியன் 3 கதையாக இருக்காது என்றும் அந்த சந்தேகமும் சர்ச்சையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக என்ன கதை என்பதை படக்குழு முதல் பார்வையிலேயே விளக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர். மம்மி பட வில்லன் அர்னால்டு வோஸ்லூ இந்த படத்தில் சர் தியோடர் ஹெக்டார் எனும் ஆங்கில அதிகாரியாக நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக இது வேறு கதை தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X