உனக்கென்னம்மா நீ பைத்தியம்.. என்ன வேணா பேசுவ.. சுசித்ராவை பங்கமாக கலாய்க்கும் கமல் ஃபேன்ஸ்!
சென்னை: பாடகி சுசித்ரா சேரன், தனுஷ், கமல்ஹாசன் என தொடர்ந்து பிரபலங்களை டார்கெட் செய்து படுமோசமாக பேட்டி அளித்து வரும் நிலையில், உனக்கென்னம்மா நீ பைத்தியம் என கமல் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வசமாக சிக்கிய சுசித்ராவை அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து செய்து பிரிந்து சென்றார்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சுசித்ரா பாலாஜி முருகதாஸை மயக்க என்னவெல்லாம் பண்ணி சீன் போட்டார் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் சுசித்ரா சரியான மோசமான நபர் என கமல் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
விஜய் டிவி காலில் விழுந்து: பிக் பாஸ் ஓனர் கிடையாது கமல். விஜய் டிவியின் காலில் விழுந்து அந்த வாய்ப்பை வாங்கி உள்ளார் என்றும், அவர் ஒரு தாத்தா ஹோஸ்ட் என படுமோசமாக உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி சுசித்ரா தற்போது பிரதீப் ஆண்டனி விவகாரத்தை வைத்து மட்டம் தட்டி விடலாம் என நினைத்து தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் என கமல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
உனக்கென்னம்மா நீ பைத்தியம்: கமல்ஹாசன் ஒரு திருநங்கை என்று சமீபத்தில் அவர் அணிந்து வந்த வித்தியாசமான உடையை வைத்து படு மோசமாக சுசித்ரா பேசி வரும் நிலையில், உனக்கென்னம்மா நீ பைத்தியம் என கமல் ரசிகர்கள் சுசித்ராவை பதிலுக்கு பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள்: கமல்ஹாசன் குறித்து சுசித்ரா பேசும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ரஜினி ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதற்கு முன்னதாக அவர் குறித்து சுசித்ரா சொன்ன எதையும் கேட்காத நீங்க இப்ப மட்டும் அதை நம்புறீங்களா என கமல் ஃபேன்ஸ் டென்ஷனாகி சோஷியல் மீடியாவில் மினி யுத்தத்தையே போட்டு வருகின்றனர்.
வாய்ப்பே இல்லை: பிக் பாஸ் சீசன் 4க்கு பிறகு சுசித்ராவுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லாத நிலையில், தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வாய்க்கு வந்தபடி சுசித்ரா பேசி வருகிறார் என்றும் அவர் பேச்சை எல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்க மாட்டோம் என கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











