Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
nadigarsangamelection: ரஜினியை நினைத்து வருத்தப்பட்ட கமல் ஹாஸன்
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த கமல் ஹாஸன் நண்பர் ரஜினியை நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறந்து இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.
நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்டோர் வாக்களித்துவிட்டனர். இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் வடிவேலு வரவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் பிற்பகலில் வந்து வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
நடிகர் சங்க தேர்தலில் ரஜினியால் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு தபால் ஓட்டு சரியான நேரத்தில் போய் சேராதது தபால் துறையின் பிழையாக இருக்கலாம்.
இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 3 ஆயிரம் வாக்குகள் உள்ள நடிகர் சங்க தேர்தல் குறித்து இத்தனை செய்திகள் வெளியிடுவது பாராட்டுக்குரியது என்றார்.
மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்தார்.
அவரின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ, சர்கார் படத்தில் விஜய் ஒரு ஓட்டு போட அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார், நீங்கள் இங்கனக்குள்ள இருக்கிற மும்பையில் இருந்து வர முடியாதா சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்குமா, நடக்காதா என்று இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனைத்தும் உறுதியானதால் தான் தபால் ஓட்டுகள் அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் உள்ளவர்களே தேர்தல் இன்று நடக்காது என்று நினைத்து வேறு வேலைகளை பார்க்கத் திட்டமிட்டிருந்தனர்.
அப்படி இருக்கும்போது மும்பையில் இருக்கும் ரஜினி மட்டும் என்ன பண்ணுவார், பாவம். அவரை எப்படி குறை சொல்ல முடியும்?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்