கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி.. கொஞ்சம் கூட குறையாத அதே அழகு!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியின் புகைப்படத்தை சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதி, பியாசி நாடி என்ற படத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

அதன் பின் 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடி போட்டு நடித்தார். இந்த படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Kamal haasan First wife Vani ganapathy latest photos

கமல்ஹாசன் : இந்திய அளவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். வெள்ளித்திரையில் மாஸ் காட்டியது மட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

வசீகரமான முகம் : நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதாநாயகனுக்குரிய நிறம், அழகு, வசீகரம், என அத்தனை அம்சங்களும் பக்காவாக பொருந்தி இருக்கும். இதனால் ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா என பல நடிகைகளும் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக குட்டிபத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் அனைவருக்கும் நோ சொல்லி விட்டு கடந்த 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Kamal haasan First wife Vani ganapathy latest photos

காதல் திருமணம் : இந்த தம்பதிகள் சுமார் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து பின் விவாகரத்து பெற்று மொத்தமாக பிரிந்து விட்டனர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் இரண்டாவதாக சாரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

பல ஆண்டுகளுக்கு பின் : இந்நிலையில், கன்னட நடிகர் அம்பரீஷ் மகனின் திருமணத்தில் 80ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சுஹாசினி, ராதிகா, லிஸி, வாணி கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத வாணி கணபதியை பார்த்து ரசிகர்கள் பூரிப்பு அடைந்தனர். கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X