Kamal: ஆட்டோகிராப் கேட்ட மாணவி... சான்ஸ் கொடுத்த கமல்... திரையுலகில் சம்பவம் செய்த நடிகை..!

சென்னை: திரையுலகில் 60 ஆண்டுகளாக டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

தனது திரைப் பயணத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கமல் அறிமுகத்தில் சினிமாவில் அறிமுகமான பலரும் பிரபலங்களாக வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் மிக முக்கியமானவர் நடிகை அம்பிகா, ஆட்டோகிராப் கேட்ட அம்பிகாவுக்கு சினிமாவில் சான்ஸ் கொடுத்து தூக்கிவிட்டவர் கமல்ஹாசன் தான்.

 Kamal Haasan gave Actress Ambika a chance to act in cinema

அம்பிகாவுக்கு வாய்ப்புக் கொடுத்த கமல்ஹாசன்: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அம்பிகா. மலையாளத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவரது தங்கை ராதாவும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 1979ம் ஆண்டு வெளியான சக்களத்தி என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன்பின்னர் கே பாக்யராஜ் உடன் நடித்த அந்த 7 நாட்கள் திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது. ஆனால், தமிழில் அம்பிகாவின் கேரியர் உச்சம் தொட கமல்ஹாசன் தான் காரணம் என சொல்லப்படுகிறது. 1977ல் 'காத்திருன்ன நிமிஷம்' என்ற படத்தின் ஷூட்டிங்காக எர்ணாகுளம் சென்றுள்ளார் கமல்ஹாசன். அந்நேரத்தில் தான் கமல் வாணிகணபதியோடு காதல் வயப்பட்டு திருமணம் குறித்த பேச்சும் நடந்துள்ளது.

அப்போது பள்ளி மாணவி ஒருவர் ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசனை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரை அழைத்த கமல்ஹாசன், "சினிமாவில் நடிக்க விருப்பமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் இல்லை என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இதனைக் கேட்ட கமல் "படிப்பெல்லொம் முடித்து சினிமாவில் நடிக்க விரும்பினால் சென்னையில் வந்து என்னைப்பார். சினிமாவில் நடிப்பதற்கான முகம் உனக்கு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

அதன்பின்னர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்த அந்த மாணவி, அடுத்த வருடமே நாயகியாக கமிட்டானார். பின்னர் கடல் மீன்கள் படத்தில் அம்பிகா நடிக்க வந்ததும் கமல் முதலில் சிபாரிசு செய்தது ஸ்ரீதரின் சக்தி 79 என்ற மும்மொழி படத்துக்கு தானாம். அதேபோல் வாழ்வே மாயம் படத்திற்கும் கமல் தான் சிபாரிசு செய்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், 'சகலகலா வல்லவன்' படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்துள்ளது.

தொடர்ந்து காக்கிச் சட்டை, காதல் பரிசு, விக்ரம், உயர்ந்த உள்ளம் என கமல் - அம்பிகா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரித்துள்ளது. அதன்பின்னர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தாராம் அம்பிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X