அப்போ ஆரி தான் வின்னரா? தனித்துவம் தான் வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி தானா என்கிற சந்தேகம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

அன்பு தான் ஜெயிக்கும் என அர்ச்சனா குரூப்பும், அந்த குரூப்பை காலி பண்ணி ஜெயிக்க குட்டி குரூப் உருவாக்கி விளையாடும் பாலா குரூப்புக்கும் வேட்டு வைக்கும் விதமாக தனித்துவம் தான் உங்களை வெற்றி பெற வைக்கும் என கமல் சொன்னதை ஆரியின் ஆர்மியினர் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், அதை கமல் உஷாரா 56வது நாளிலே சொல்லி விட்டது தான் சிறப்பு.

பெரிய குரூப்

பெரிய குரூப்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு சின்ன சின்ன குரூப் இருப்பது வழக்கம் தான். ஆனால், பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 குரூபிசம் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. அர்ச்சனா மற்றும் பாலாவின் குரூப் தான் இப்ப பிக் பாஸ் வீட்டிலேயே டாப்.

கிழித்துத் தொங்கவிட்ட கேபி

கிழித்துத் தொங்கவிட்ட கேபி

அர்ச்சனாவின் குரூப் தான் பெருசு என்றும், அந்த அணியில் இருப்பவர்கள் நாமினேஷனுக்கு வராமல் தப்பித்து வருகின்றனர் என்றும் பாலா குற்றச்சாட்டுக்களை அடுக்க, பதிலடியாக கேபி, நீ மட்டும் என்னப்பா குரூப்பாத்தான இருக்க என பாலாஜியின் முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டார்.

நொந்து போன கமல்

நொந்து போன கமல்

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையான நாம ஏதாவது பேசலாம் என வந்த கமல், இவங்க போடுற குழாயடி, மீன் மார்க்கெட் சண்டையை வாரம் முழுக்க டிவியில் பார்த்தது போதாதுன்னு இன்னைக்கும் பார்க்க வைக்கிறாங்களே என நொந்தே போய்விட்டார்.

புரமோவில் மட்டும் தான் கெத்து

புரமோவில் மட்டும் தான் கெத்து

புரமோவில் கமல் சார் சாட்டையை சுழற்ற போகிறார் என ஆரி சொன்னதையே நிகழ்ச்சியில் கட் பண்ணிட்டாங்க, ஏன்னா, நிகழ்ச்சியில் கமல் சார் அப்படி எந்த ஒரு சாட்டையையும் சுழற்ற போவதில்லை என்பது தான் உண்மை. ரொம்ப சாஃப்ட்டா பிரச்சனை பற்றி கேட்டு, போட்டியாளர்களுக்குள்ளே கொளுத்திப் போடும் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன.

தனித்துவம் தான் ஜெயிக்கும்

தனித்துவம் தான் ஜெயிக்கும்

அர்ச்சனாவுக்கும், பாலாவுக்கும் நல்லா உரைக்கும் படி கமல் இன்னைக்கு குரூப், அன்பு எல்லாமே இருக்கலாம் தப்பில்லை. ஆனால், அதை சார்ந்து உங்க கேமை விளையாடாதீங்க, தனித்துவம் தான் பிக் பாஸ் டைட்டிலை உங்களில் ஒருத்தருக்கு கொடுக்கும் என்று தடாலடியாக கூறினார்.

நாட்கள் தான் முக்கியம்

நாட்கள் தான் முக்கியம்

பிக்பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் போட்டியாளர்கள் இருக்கிறார்களோ, அத்தனை நாட்கள் தான் அவங்களுக்கு சம்பளம் கிடைக்கும். தனித்துவமா விளையாடுனா? சீக்கிரமே வீட்டுக்குப் போய் பொட்டலம் மடிக்க வேண்டியது தான். குரூப்பா இருந்து, தேவை இல்லாதவர்களை கழித்துக் கட்டி விட்டால், சம்பளமும் கிடைக்கும், தங்களுக்குள் ஒருவருக்கு டைட்டிலும் கிடைக்கும் என்பது தான் ஸ்ட்ராட்டஜியே!

ஆரி தான் வின்னரா?

ஆரி தான் வின்னரா?

தனித்துவம் தான் டைட்டில் வின்னராக்கும் என கமல் சொன்னதை கேட்ட உடனே சமூக வலைதளத்தில் ஆரியின் ஆர்மியினர், அப்போ ஆரி தான் டைட்டில் வின்னர் என அறிவிச்சுடலாமா? என மீம்களை போட ஆரம்பித்து விட்டனர். 56 நாட்களில் அவர் தான் அதிகப்படியாக தனித்துவமாக விளையாடி உள்ளார் என்பதே அவர்களது கருத்து.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
கமல் ரொம்ப உஷார்

கமல் ரொம்ப உஷார்

பாதி நாள் ஓடிடுச்சு, இப்படியே இன்னும் பாதி நாள் ஒடிட்டா ஷோ ரொம்ப போராகிவிடும், இவங்களை தனித்துவமா விளையாட சொன்னா, ரெண்டு டீமா நடக்கும் சண்டை வந்து 15 பேர் சண்டையா மாறி பிக் பாஸ் ஷோ களைகட்டும் என்கிற ரீதியிலும், இப்பவே முழித்துக் கொண்டு, மத்தவங்களும் தனியா விளையாடி ஜெயிக்கப் பாருங்க என கொடுக்கும் டிப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆளயே காணோம்

ஆளயே காணோம்

சனிக்கிழமை எபிசோடில் அவ்வளவு பெரிய கலவரத்துக்கு இடையே ரம்யா பாண்டியன் ஒரு வார்த்தை கூட திறக்கவே இல்லை. அந்த அளவுக்கு சைலன்ட்டாக இருந்து டைட்டிலை நோக்கி அவரும் தனியாக ஒரு கேமை ஆடிக் கொண்டிருக்கிறார் என்று தான் தெரிகிறது. நாளைக்காவது பேசுகிறாரா? என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X