bigg boss 7: மூக்கு, வாயை உடைச்சிடுவேன்.. வன்முறை பேச்சை கண்டித்த கமல்..நொந்து போன விஜய் வர்மா!
சென்னை: மூக்கு, வாயை உடைச்சிடுவேன் என்று வன்முறையாக பேசிய விஜய் வர்மாவை கமல் கடுமையாக கண்டித்தார்.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகளை, இந்த முறை வீட்டிற்குள் முதல் வாரமே நடந்து கொண்டு இருக்கிறது.
நேற்று விசித்ரா,ஜோவிகா பிரச்சனையை தீர்த்து வைத்த கமல் இன்று விஜய் வர்மா,பிரதீப் சண்டை குறித்து பேசினார்.

எனக்கு வெளியில் ஆள் இருக்கு: அதில், நடிகர் கமல்ஹாசன், விஜய் நீங்க முழங்கையை வச்சி இப்படி இடிச்சா மூக்கு, வாய் உடைந்துவிடும். எனக்கு வெளியே எல்லாம் ஆள் இருக்கு. அப்படின்னு நீங்க சொன்னீங்க என்று சொல்ல, அதற்கு விஜய் சார் அப்படியெல்லாம் இல்லை என்று சமாளிக்க, அதற்கு கமல்ஹாசன் எங்ககிட்ட குறும்படம் இருக்கு என்றார்.
மிரட்டுனா என்ன அர்த்தம்: மேலும் வெளியில்வா பாத்துக்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம், இது பிக் பாஸ் வீடுங்க, வெளியில் நிறைய பேர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதால் வன்முறை பேச்சுக்கூடாது, இதற்கான எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று மஞ்சள் ஸ்ட்ரைக் கார்டை காட்டி கண்டித்தார். மேலும், இந்த கார்டை மூன்று முறை நீங்கள் வாங்கிட்டீங்கன்னா சந்தோஷமா என்கூட வந்து பேசிட்டு நீங்க கிளம்பி போய்கிட்டே இருக்கலாம் என்று எச்சரித்தார்.
விஜய்யை கண்டித்த கமல்: இதையடுத்து, கமல்ஹாசன் நான் விஜய் வர்மாவை கண்டித்ததில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கு என்று நினைக்கிறேன் என்றார். இதையடுத்து பேசிய மாயா கிருஷ்ணன், விஜய் வர்மாவை விட பிரதீப், விசித்ரா என பலரும் இதைவிட வன்முறையாக பேசினார்கள் அவர்களுக்கும் மஞ்சள் கார்டு கொடுத்து இருக்க வேண்டும் என்றார்.
காரணம் இதுதான்: இதையடுத்து பேசிய கமல் விஜய்க்கு மஞ்சள் கார்டு கொடுத்ததற்காக காரணத்தை விளக்கினார். அதில், ஒருவரின் சோகத்தை கிண்டலடித்து பேசியது மிகுந்த கண்டனத்திற்குரிய விஷயம். இதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை.ஆனால், நான் கூறவரும் விஷயம் விஜய் மற்றும் அவருடன் இருந்து கிண்டலடித்த மற்றவர்களுக்கு புரியும் என்றும் அவர்களுக்கு புரிந்தால் போதும் என்றும் கமல் மேலும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











