கமலின் ஈகோ வெளியே வந்து விட்டது.. பரிதாபங்கள் பண்ண வேலை.. ரசிகர்களை கலாய்க்கலாமா? சனம் கேள்வி!

சென்னை: இந்த சீசனில் போட்டியாளர்களை விட அதிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசனை தான் ரசிகர்களும் விமர்சகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும், உச்சகட்டமாக நேற்று ஒளிபரப்பான சனிக்கிழமை எபிசோடில் விமர்சகர்களையும் ரசிகர்களையும் கமல் கலாய்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பிக் பாஸ் போட்டியாளரும் விமர்சகருமான சனம் ஷெட்டி முதல் ஜோ மைக்கேல் வரை பலரும் கமலுக்கு எதிரான ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சீசனிலும் சோஷியல் மீடியாவில் குவியும் ட்ரோல்களுக்கும் நிகழ்ச்சியை பற்றிய கருத்துக்களுக்கு மட்டுமே கமல் பதில் அளித்து வந்த நிலையில், இந்த சீசனில் அவரே டென்ஷன் ஆகும் படி ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்று வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி சிக்கலில் சிக்கிக் கொண்டார்.

Kamal Haasan gets trolled by Sanam Shetty and Joe Michael for the latest Bigg Boss Tamil 7 episode

பிக் பாஸ் பரிதாபங்கள்: பரிதாபங்கள் கோபி, சுதாகர் இந்த முறை பிக் பாஸ் பாவங்கள் ஷோவை வேறலெவலில் எடுத்து சென்று சுடிதார் எல்லாம் அணிந்துக் கொண்டு கமலை அசிங்கப்படுத்தியது அவரை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருப்பது தொடர்ந்து சோஷியல் மீடியா கமெண்ட்டுகள் பற்றியும் விமர்சகர்களால் நல்ல படங்களை எடுக்க முடியாது என்று கூறும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஈகோ வெளியே வந்துடுச்சு: கமல்ஹாசன் எப்படி ரசிகர்களை விமர்சிக்கலாம் என ஜோ மைக்கேல் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். உங்க படம் வரும் போதெல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண மக்களை இப்படியா பப்ளிக் ரிவ்யூ சொல்றேன் என்கிற பெயரில் கலாய்ப்பீங்க கமல் சார், தரமான செருப்படி கொடுத்ததற்கு நன்றி, இதுதான் உங்க ட்ரூ கலர்.. உங்க ஈகோ வெளியே இந்த சீசனில் வெளியே வந்துடுச்சு என ஜோ மைக்கேல் கடுமையாக ட்வீட் போட்டு விளாசித் தள்ளி உள்ளார்.

Kamal Haasan gets trolled by Sanam Shetty and Joe Michael for the latest Bigg Boss Tamil 7 episode

சனம் ஷெட்டி கேள்வி: ஜோ மைக்கேலை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான சனம் ஷெட்டி ஒவ்வொரு எபிசோடிலும் கமல் சார் கமல் சார் என உருகி உருகி பேசி வந்தவர் தற்போது ரசிகர்களை எப்படி mock பண்ணலாம் கமல் சார் இதெல்லாம் சரியே கிடையாது என விளாசி உள்ளார். இதே ஒன்றும் தெரியாத ரசிகர்கள் தான் உங்க படத்தை எல்லாம் பார்த்து சாதாரண நடிகர்களை ஸ்டார் ஆக்கியது. எங்களுக்கு டைரக்‌ஷன் பற்றித் தெரியாது. இனி வரும் படங்களை இயக்குநர்களுக்காக மட்டும் பண்ணுங்க.. எங்களுடைய பணமும் உங்களுடைய பணமும் மிச்சம் ஆகும் என வறுத்தெடுத்துள்ளார்.

Kamal Haasan gets trolled by Sanam Shetty and Joe Michael for the latest Bigg Boss Tamil 7 episode

கமல் சார் ரசிகர்களை கலாய்க்கல: ஜோ மைக்கேல் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் சான்ஸ் கிடைச்சதும் சந்துல சிந்து பாடிடுவீங்களே அவரு ரசிகர்களையோ மக்களை கலாய்க்கவில்லை. உங்களை போன்ற ஹாஃப் பேக்டு ரிவ்யூவர்களை தான் கலாய்த்துத் தள்ளி உள்ளார். அதான் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவரை நீங்க எவ்ளோ வேணாம் ட்ரோல் பண்ணலாம். பதிலுக்கு அவர் திருப்பி பண்ணா தாங்க முடியல தான என கமல் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் இருவரையும் கழுவி ஊற்றி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X