இந்தியன் 2 ரிலீஸுக்கு முன்னாடியே கார் பரிசு கொடுத்த கமல்ஹாசன்… இப்பவே ஆரம்பிச்சாச்சு போல!

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்னரே கார் பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

வேகமெடுத்த இந்தியன் 2

வேகமெடுத்த இந்தியன் 2

கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. லஞ்சம், ஊழலுக்கு எதிரான பொலிட்டிக்கல் ஜானர் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கமல் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் கமலின் சேனாதிபதி என்ற இந்தியன் தாத்தா கேரக்டர் மாஸ் காட்டியது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கேரக்டரில் இந்தியன் தாத்தாவுக்கு எப்போதுமே இடம் உண்டு. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வேகமாக உருவாகி வருகிறது.

உடலை முறுக்கேற்றும் கமல்

உடலை முறுக்கேற்றும் கமல்

கமல் எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் கேரக்டருக்கு தேவையான அளவில் உடலை மெருகேற்றும் வழக்கம் கொண்டவர். எந்த கேரக்டருக்கு எப்படி தேவையோ அச்சு அசலாக அப்படியே மாறிவிடுவார். இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்காக கமல் அதிகம் ஃபிட்னஸ் ட்ரெய்னிங் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வயதிலும் உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைப்பது கமலால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தியன் 2 படத்திற்கு ரொம்பவே ஃபிட்னஸ் தேவைப்படுவதால், கமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

இப்பவே கார் பரிசு கொடுத்தாச்சு

இப்பவே கார் பரிசு கொடுத்தாச்சு

இந்தியன் 2 படத்தில் தனது கேரக்டரின் வலிமை குறைந்துவிடக் கூடாது என ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம் கமல். இதற்காக கமலுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஒருவர் தீவிரமான பயிற்சிக் கொடுத்துவருகிறார். அவர் கொடுத்த உடற்பயிற்சியில் கமலும் பக்காவாக மாறிவிட, அந்த ஜிம் ட்ரெய்னருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கமல். தனக்கு உடற்பயிற்சி கொடுத்த அந்த ஜிம் மாஸ்டரை குடும்பத்துடன் வரவைத்து, அவருக்கு புதிய ரெனால்ட் காரை பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் கமல். இந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

லோகேஷை தொடர்ந்து ஜிம் மாஸ்டர்

லோகேஷை தொடர்ந்து ஜிம் மாஸ்டர்

ஜிம் மாஸ்டருக்கு கமல் கார் கிஃப்ட் கொடுத்த சம்பவம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சில மாதங்கள் முன்னர் தான் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்து அசத்தினார். அதேபோல், லோகேஷிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கும் பைக் பரிசளித்து பாராட்டினார். இப்போது இந்தியன் 2 படத்திற்காக கார் பரிசு ட்ரெண்டிங்கை தொடங்கி வைத்துள்ளார். படம் வெளியானதும் இன்னும் பல ஆச்சரியங்களை கமல் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X