"லைஃப் டைம் செட்டில்மென்ட்.." விக்ரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்
சென்னை: விக்ரம் படம் வெளியான 4 நாட்களில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படமாக மாறி உள்ளது.
தனது கைப்பட எழுதிய கடிதம், வீடியோ என தொடர்ந்து விக்ரம் வெற்றியை கொண்டாடி வருகிறார் கமல்.
இப்படியொரு வெற்றியை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தற்போது சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்து அசத்தி இருக்கிறார் கமல்.
Recommended Video

நான் வெற்றிப் பெற்றவன்
1986ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடலிலேயே விக்ரம்.. நான் வெற்றிப் பெற்றவன் என வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதே டைட்டிலில் வெளியான விக்ரம் படம் மட்டும் வெற்றி பெற மிஸ் பண்ணுமா? என்ன அட்டகாசமான வெற்றியை பெற்று அசத்தி வருகிறது.

லோகேஷுக்கு கடிதம்
கமல் இயக்கத்தில் வெளியாகும் படங்களை தவிர கமலை வேறு யாரும் இயக்கினால் அந்த படம் வெளியாவதிலேயே சிக்கல் ஏற்படும் என்றும் அப்படியே வெளியானாலும் வெற்றி பெறுவது கடினம் என்றும் ஏகப்பட்ட 'மித்'கள் இடம்பெற்று வந்த நிலையில், அதை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான வெற்றியை கொடுத்த நிலையில், தனது கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை லோகேஷுக்கு அளித்திருந்தார் கமல்.

500 கோடியை நெருங்கும்
விக்ரம் படத்தின் வசூலுக்கு இன்னும் ஒரு மாதம் வரை எந்தவொரு தடையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களிலேயே 175 கோடி வசூல் வந்துள்ள நிலையில், இதே வேகத்தில் படம் ஓடினால் கண்டிப்பாக 500 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் நிறைவேறினால், இந்த ஆண்டு தமிழ் சினிமாவும் காலரை தூக்கிவிட்டு கெத்தாக எங்க கிட்டயும் படைகள் இருக்கு என சொல்லலாம்.

சொகுசு கார் பரிசு
கடந்த 4 ஆண்டுகளாக எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக கமல் நடிப்பில் வெளியான படங்களும் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், இப்படியொரு படத்தைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்ஹாசன்.

என்ன விலை
60 லட்சம் முதல் 2.33 கோடி வரை லெக்சஸ் சொகுசு கார் விலை இந்தியாவில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. லெக்சஸ் காரை பரிசாக கமல் அளித்த நிலையில், உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 படத்தை முடித்த கையோடு விக்ரம் 3ம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளார். கமல், பகத் ஃபாசில், சூர்யா மற்றும் கார்த்தி அந்த படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











