'தல' படத்தில் கமல் குரல்!
சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் சில வசனங்களுக்கு மட்டும் குரல் கொடுக்க கமலை அணுக உள்ளனராம்.
தல 55 என்று சும்மா ஒரு பெயருடன் குறிப்பிடப் படும் அஜீத்தின் 55வது படத்தை கௌதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா என அஜீத்திற்கு இரண்டு நாயகிகள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கருமையான முடியுடன் இளமையான தோற்றத்தில் அஜீத் இப்படத்தில் தோன்றுகிறார் என்பதில் இருந்து ஒரு குழந்தையின் தந்தை கதாபாத்திரம் என தினமும் இப்படம் குறித்து ஏதாவது பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த பேச்சில் கமலின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.

பின்னணியில் ஒரு குரல்...
பொதுவாக கௌதம்மேனன் படம் என்றாலே அதில் நிச்சயமாக பின்னணியில் ஒரு குரல் கதையின் போக்கை விவரிப்பதாகக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

கமல் குரலில்...
அந்தவகையில், அஜீத்தின் இந்த படத்திலும் படத்தின் போக்கை விவரிக்கும் குரல் ஒன்று ஒலிக்கப் போகிறதாம். அதை யாராவது பிரபலம் சொன்னால் நன்றாக இருக்கும் என எண்ணிய கௌதம்மேனன் கமலைத் தேர்வு செய்துள்ளாராம்.

வேட்டையாடு விளையாடு...
ஏற்கெனவே கமலுடன் ‘வேட்டையாடு விளையாடு' படத்தில் கௌதம்மேனன் இணைந்து பணியாற்றி உள்ளார். எனவே, படத்தின் ஒரு சில காட்சிகளின் பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.

கமலை அணுக முடிவு...
இது தொடர்பாக விரைவில் கமலை அணுக கௌதம்மேனன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் தலைப்பு ரிலீஸ்...
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், வரும் தீபாவளிக்கு படத் தலைப்பும், பாடலும் வெளியாகலாம் என்றும், படம் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











