நான் வீட்டுக்குப் போறேன்னு அழுது அடம்பிடித்த ஆயிஷா.. மலையாளத்தில் கமல் எவிக்ட் பண்ணது யாரை தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ரொம்பவே பட்டாசாக வெடித்தது.

போட்டியாளர்களுக்கு மிக்சர் திண்ணும் டாஸ்க் எல்லாம் கொடுத்து கமல்ஹாசன் வச்சு செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன விட்டுடுங்க வீட்டுக்கு போயிடுறேன் என ஆயிஷா அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும், இரும்மா உனக்கு இன்னும் பனிஷ்மென்ட் இருக்குன்னு கமல் விளையாடி வருகிறார்.

ஷெரினாவுக்கு அசிங்கம்

ஷெரினாவுக்கு அசிங்கம்

பிக் பாஸ் வீட்டில் கடந்த பல சீசன்களாக ஆங்கிலத்திலேயே பேசிய போட்டியாளர்களுக்கு கூட இப்படியொரு நிலைமை இல்லை. ஆனால், இந்த முறை மலையாளத்தில் பேசிய ஆயிஷாவுக்கும் ஷெரினாவுக்கும் ஏகப்பட்ட வார்னிங் கொடுக்கப்பட்டன. கடைசியாக ஷெரினாவை எவிக்ட் செய்யும் போது மலையாள கார்டு காட்டி கமல் எவிக்ட் பண்ணதை விட பெரிய அசிங்கம் இருக்க முடியாது என்றும் அந்த அளவுக்கு பண்ணியிருக்க தேவையில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பலமுறை வார்னிங்கிற்கு பிறகும் அவர்கள் மாற்றிக் கொள்ளாததற்கு சரியான தண்டனை தான் இது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அடம்பிடித்து அழுத ஆயிஷா

அடம்பிடித்து அழுத ஆயிஷா

நான் தோத்துட்டேன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும் என ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு இருந்த ஆயிஷாவுக்கு கடைசியாக ஷெரினா வெளியேறியது பேரதிர்ச்சியாக அமைந்தது. உடனடியாக தரையில் உட்கார்ந்து அழ தொடங்கிட்டார். என்ன வீட்டுக்கு அனுப்பிடுங்க, என்னால் விளையாட முடியாது என ஆயிஷா சொன்னதை கேட்டு ரசிகர்களே பரிதாபப்பட்டு அவரையும் சேர்த்து அனுப்பிடுங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஷெரினா அப்செட்

ஷெரினா அப்செட்

இந்த வாரம் எப்படியும் நாம போக மாட்டோம் என 50-50 நம்பிக் கொண்டிருந்த ஷெரினாவை அதிரடியாக அதுவும் மலையாள எவிக்‌ஷன் கார்டு கொடுத்து கமல் அசிங்கப்படுத்தி அனுப்பியதும் கடுப்பான ஷெரினா அவரும் அழுது கொண்டு யாரிடமும் பேசாமல் தனியாக கிளம்பி கேட் அருகே சென்றார். மற்ற போட்டியாளர்கள் ஷெரினாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மலையாளத்தில் பேசிய கமல்

மலையாளத்தில் பேசிய கமல்

கடுப்பான ஷெரினாவை சிரிப்புடன் வெளியே அனுப்ப வேண்டும் என்பதால், அவர் வெளியே வந்ததும் கமல்ஹாசன் மலையாளத்தில் அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவரை ஆசுவாசப்படுத்தினார். ஷெரினாவின் பயண வீடியோவிலும் அந்த விழுந்த காட்சிகளும் சண்டைகளும் இடம்பெற்றிருந்தன. இதுவரை இல்லாத அளவுக்கு ஷெரினா காரில் ஏறி கிளம்பும் வரை காட்டியிருந்தனர்.

அழுகை நிறுத்தாத ஆயிஷா

அழுகை நிறுத்தாத ஆயிஷா

நான் எப்படியாவது பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே போகணும் என்னால் இனியும் இங்கே இருக்க முடியாது என ஆயிஷா அழுது புலம்ப, கவுன்சிலீங் பண்ணலாம், வெளியே போகும் வழியை தேடலாம் என ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் ஆயிஷாவுக்கு ஆறுதல் சொன்னார்கள். அடுத்த வாரமும் ஆயிஷா அழுமூஞ்சியாகவே இருக்கப் போறாரா? அல்லது சத்யா சீரியல் போலீஸாக மாறி அதிரடி காட்டப் போகிறாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X