Indian 2: தைவானில் மாஸ் காட்டும் கமல்.. ஹாலிவுட் ஸ்டாரும் இந்தியன் 2வுல ஆன் போர்டாம்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தற்போது தைவானில் நடைபெற்று வருகிறது.

Kamal Haasan gives mass look at Taiwan restaurant and this hollywood star also joined Indian 2

சேனாபதி இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாடு சென்ற நிலையில், அங்கே இருந்து மீண்டும் அவர் எப்படி இந்தியா வருகிறார் என்கிற காட்சிகளை அங்கே ஒரு பெரிய ரயில் நிலையத்தில் படமாக்கி வருகிறார் ஷங்கர் என தகவல்கள் கசிந்துள்ளன.

Kamal Haasan gives mass look at Taiwan restaurant and this hollywood star also joined Indian 2

மேலும், ஹாலிவுட் பிரபலமும் தைவானில் எடுக்கப்படும் இந்தியன் 2 போர்ஷனில் இணைந்துள்ள ஹாட் தகவல்களும் வெளியாகி உள்ளன.

தைவானில் மாஸ் காட்டும் கமல்:

Kamal Haasan gives mass look at Taiwan restaurant and this hollywood star also joined Indian 2

இந்தியன் 2 படத்துக்காக தைவான் சென்றுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் கருப்பு சட்டை மற்றும் கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ரெஸ்டரன்ட் ஒன்றில் செம கூலாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு "Good Afternoon' என அந்த ஊர் மொழியில் கேப்ஷன் கொடுத்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் டபுள் ஆக்‌ஷனில் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், இன்னமும் அந்த படத்துக்கான கிரேஸ் ரசிகர்களிடம் அப்படியே நிலவி வருகிறது. ஊழல்வாதிகளை சேனாபதி தாத்தா தனது பெல்ட்டில் உள்ள கத்தியை எடுத்துக் குத்த எப்போதான் வருவார் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், வர்மக் கலையில் இரண்டு விரல்களை மடக்கி கழுத்திலேயே ஒரு குத்து விட்டு சப்த நாடிகளையும் அடக்கி விட்டு சம்ஹாரம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை இன்னமும் நைட்மேராகவே மிரட்டி வருகின்றன.

இந்நிலையில், லைகா தயாரிப்பில் மீண்டும் பிரம்மிக்க வைக்கும் கதையுடன் 90 வயது சேனாபதி தாத்தா என்ன செய்யப் போகிறார் என்கிற ஆவலே அந்த படத்தை பார்க்க ரசிகர்களை தூண்டி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தியன் 2 வருமா? அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருமா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஷங்கர் மற்றும் கமல் உள்ளிட்ட இந்தியன் 2 குழுவினர் தைவான் சென்றுள்ளனர்.

ஹாலிவுட் ஸ்டார்:

Kamal Haasan gives mass look at Taiwan restaurant and this hollywood star also joined Indian 2

ஏற்கனவே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்தியன் 2வில் நடித்து வரும் நிலையில், தைவான் போர்ஷனில் ஹாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார். கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த மோஷன் பிக்சர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மார்கஸ் லான்கஸ்டர் (Margaux Lancaster) தான் அந்த ஹாலிவுட் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X