டோர் மூடாம பாத்ரூம் போனா வீட்டுக்குத்தான் அனுப்புவாங்க.. பிரதீப் ஆண்டனி எலிமினேஷன்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கொஞ்சமாவது ரசிகர்கள் பார்க்க காரணமே பிரதீப் ஆண்டனி வித்தியாசமாக சிரிப்பதையும் பிஹேவ் பண்றதையும் பார்க்கத்தான் அவரையே வெளியே அனுப்பி ரிஸ்க் எடுத்துட்டீயே சிங்காரம் என பிக் பாஸ் டீமையும் விஜய் டிவியும் ஒரு பக்கம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மறுபக்கம் ஓவியாவையே வீட்டுக்கு அனுப்பி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியவர்கள் பிக் பாஸ் டீம் என்றும் பாத்ரூம் போனாக் கூட டோர் மூடாம போறவனை வீட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடாது மனநல காப்பகத்துக்குத்தான் அனுப்பி இருக்க வேண்டும் என பிரதீப் ஹேட்டர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Kamal Haasan gives red card to Pradeep Antony from Bigg Boss Tamil 7 house gets huge reactions

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் இருந்த நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் போல தெரிகிறது. அன்ன பாரதி தான் எலிமினேட் ஆகிறார் என ஷோ தொடங்கும் முன்பே தகவல்கள் லீக் ஆனதை அறிந்து கொண்ட பிக் பாஸ் இயக்குநர் கடுப்பாகி பிரதீப் ஆண்டனியை காவு கொடுத்து விட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஓவியா, சனம் ஷெட்டி என பல போட்டியாளர்கள் அன்ஃபேர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றமும் அன்ஃபேர் எவிக்‌ஷன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Kamal Haasan gives red card to Pradeep Antony from Bigg Boss Tamil 7 house gets huge reactions

ரவீணா அண்ணாக்கயிறு: பொது வழக்கில் அண்ணாக்கயிறு எனப்படும் அரைஞாண் கயிறு அதுவும் ரவீணா தாஹா அணிந்திருக்கும் அண்ணாக்கயிறு பற்றியெல்லாம் பிரதீப் ஆண்டனி கமெண்ட் அடித்திருக்கிறார். மேலும், மணிகண்டன் பாத்ரூமுக்கு செல்லும் போது பாத்ரூம் டோர் மூடாமல் கேவலமான வேலை பார்த்தார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என தனிப்பட்ட முறையில் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து வந்து கமல் கேட்க பலரும் கொடுக்கலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் கூறும் 3வது ப்ரோமோவும் வெளியாகி உள்ளது.

Kamal Haasan gives red card to Pradeep Antony from Bigg Boss Tamil 7 house gets huge reactions

திட்டும் ரசிகர்கள்: பிரதீப் ஆண்டனி எவிக்ட் செய்யப்பட்டது தவறு என பிக் பாஸ் நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் திட்டி வரும் நிலையில், பிரதீப் ஆண்டனியை இதுவரை உள்ளே வைத்திருந்ததே தவறு என சில ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். வனிதா விஜயகுமார் இதையெல்லாம் தெரிந்துக் கொண்டு தான் இன்று அவரை தாக்கி ட்வீட் போட்டு இருந்தாரா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X