இளையராஜா பயோபிக்.. இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு கமல்ஹாசன் கொடுத்த அட்வைஸ் இதுதான்!

சென்னை: இளையராஜா மீது எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. இசையை ரசிக்க மட்டுமே எனக்குத் தெரியும். எஸ்.பி.பி போல பாட எல்லாம் முயற்சி பண்ணும் போது அதெல்லாம் பண்ணாதீங்க அப்படியே விட்ருங்க, அதுவா உள்ளே இருந்து ஒன்று வரும் என எனக்கு பாடுவதற்கு பெரிய பாடம் எடுத்தவரே இளையராஜா தான் என பேசத் தொடங்கிய கமல்ஹாசன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு ஒரு சூப்பரான அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள இளையராஜா பயோபிக் படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Kamal Haasan gives super advice to Arun Matheswaran to make Ilayaraja biopic

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இளையராஜாவாக தனுஷ்: நடிகர் தனுஷ் தீவிர இளையராஜா ரசிகர் என்பதை பல முறை பல மேடைகளில் கூறியிருக்கிறார். இளையராஜா சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கும் முதல் ஆளாக தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு சென்றார். தனுஷ் பாடும் போது கூட இளையராஜா பாடுவதை போல பாட வேண்டும் என அவர் முயற்சி செய்வது தெளிவாகத் தெரியும். இந்நிலையில், இளையராஜாவாகவே தனுஷ் நடிக்க உள்ளார். அந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

தனுஷ் பேச்சு: இளையாராஜாவின் இசை தான் நடிக்கவே எனக்கு தைரியத்தை கொடுத்தது. அவரது இசை என்னை பல தளங்களுக்கு கையை பிடித்துக் கொண்டு துணையாக கூட்டிச் சென்று இருக்கிறது. தனியாக நான் வாடும் நேரங்களில் எல்லாம் அதுதான் என் உற்ற கம்பேனியன் என உருக்கமாக பேசியுள்ளார். இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் பயோபிக் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அதில் ஒன்று நிறைவேற போகிறது என்றும் பேசினார்.

Kamal Haasan gives super advice to Arun Matheswaran to make Ilayaraja biopic

கமல் பேச்சு: பாவலர் பிரதர்ஸ் என்று தான் ஆரம்பத்தில் தெரியும். முதலில் கங்கை அமரனை தான் இளையராஜா என நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் தான் இவர் தான் இளையராஜா என்று தெரிந்துக் கொண்டேன். இளையராஜா மீது எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. ஏனென்றால் இசை எனக்கு வராது. ஆரம்பத்தில் அவரை சார் என்று அழைத்தேன். அதன் பின்னர் ஐயா என்று அழைத்தேன். அதன் பின்னர் நானும் அவரும் வேறு வேறு இல்லை என்கிற நிலைக்கே போய் விட்டோம். குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் போட்டது அந்த காதலை வைத்து இல்லை எங்கள் இருவரின் காதலை வைத்துத் தான் என கமல் அட்டகாசமாக பேசினார்.

இயக்குநருக்கு அட்வைஸ்: இளையராஜாவை பற்றி தப்பா படம் எடுக்க நினைத்தால் கூட அவரது சாதனைகளை சொல்லாமல் படம் எடுக்க முடியாது. அவர் ஆறடி இல்லை என்பார்கள். ஒரு அடி இருந்தால் கூட அந்த இசையை கடக்காமல் எவராலும் இருக்க முடியாது. எந்த பிரஷரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எப்படி இளையராஜாவை காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி காட்டுங்கள். அவரை பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் 8 பார்ட் எடுத்தால் கூட பத்தாது என அருண் மாதேஸ்வரனுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X