KH233: தொடர்ந்து தள்ளிப்போகும் கமல்-ஹெச் வினோத் ப்ராஜெக்ட்.. காரணம் இதோ!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

இதனிடையே பிரபாஸ் நடித்துவரும் பான் இந்தியா படமான பிராஜெக்ட் கே படத்தில் நடிக்க தற்போது கமல் கமிட்டாகியுள்ளார்.

Kamal haasan -H Vinoth combination KH233 movie will kickstart after Project K

தொடர்ந்து தள்ளிப்போகும் கமல் -ஹெச் வினோத் படம்: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக கொண்டாடப்படுபவர். நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர். அவரது பல படங்கள் அவருடைய மற்ற படங்களுக்கே சவாலாக அமைந்தவை. இந்நிலையில் 70 வயதை தொட்ட நிலையிலும் தற்போது அவரை 20 வயது இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடன் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியான வொர்க் அவுட் முதலியவை அவருக்கான எனர்ஜியை கொடுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் வெளியான கமலின் விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் இயக்குநராகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்தப்படத்தின் வெற்றி கமல்ஹாசனை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

இதனிடையே படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பொங்கல் ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், ஏப்ரலில்தான் படம் ரிலீசாகும் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இந்தியன் 3 படத்திற்கான வேலைகளும் நடக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இயக்கங்களில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் பான் இந்தியா படமான பிராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் சில தினங்களே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே படங்களை முடித்துவிட்டுதான் அவர் ஹெச் வினோத் படத்தில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஹெச் வினோத்தின் மற்றுமொரு சமூக அக்கறையை காட்டும் படமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளின் இறுதிக்கட்டத்தில் ஹெச் வினோத் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் டிஜிட்டல் ரைட்சை பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மணிரத்னம் படத்தின் சூட்டிங்கில் கமல் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X