Kamal Hassan: அசுர வேகத்தில் இந்தியன் 2... முதல் ஆளாக என்ட் கார்டு போட்ட கமல்ஹாசன்!
சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கும் இந்தப் படம் 2018ம் ஆண்டு முதல் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பட வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அசுர வேகத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு முதல் ஆளாக நடிகர் கமல்ஹாசன் என்ட் கார்டு போட்டுள்ளார்.

இந்தியன் 2 - என்ட் கார்டு போட்ட கமல்ஹாசன்: கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியன் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. லைகா தயாரிப்பில் தொடங்கிய இந்தியன் 2, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வந்தது.
கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை என முடங்கிய இந்தியன் 2 பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இந்த கேப்பில் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் நடித்து முடித்தார். யாருமே எதிர்பாராத நிலையில், கடந்தாண்டு வெளியான விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து மிரட்டியது. இதனால், மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. இந்த முறை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரிப்பில் இணைந்தது.
ஒருபக்கம் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்த ஷங்கர், இன்னொருபக்கம் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படப்பிடிப்பையும் வேகப்படுத்தினார். ராம் சரணின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது. இதனை தனது டிவிட்டரில் தெரிவித்திருந்த ஷங்கர், இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்தும் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி, இந்தியன் 2 படத்தில் ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்படவுள்ளதாம்.
இதனிடையே கமல் தனது போர்ஷன் முழுவதும் டப்பிங் கொடுத்துவிட்டாராம். சென்னையிலேயே இந்தியன் 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதால், தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுப்பதையும் சேர்த்தே முடித்துவிட்டாராம். சண்டைக் காட்சிகளில் கமலுக்கு வசனம் கிடையாது என்பதால், சீக்கிரமே டப்பிங் கொடுக்க ஷங்கரும் ஓக்கே சொல்லிவிட்டாராம். கமலைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் டாஸ்க்கை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 வெளியாகிவிட்டதால், கமலின் KH 234 படப்பிடிப்புக்கு செல்ல ரெடியாகிவிட்டார் மணிரத்னம். அதன்படி, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் KH 234 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து முதல் ஆளாக கமல் தான் வெளியேறப் போவதாகக் கூறப்படுகிறது. மேலும், விரைவில் இந்தியன் 2 ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் படக்குழு ரெடியாகிவிட்டதாம். இதனால், கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











