Leo - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. லியோ படத்தில் அவரை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ்.. ரெஸ்பான்ஸ் அள்ளுது
சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. படமானது இன்று பான் இந்தியா படமாக ரிலீஸாகியிருக்கிறது. தங்கள் தளபதியின் படம் வெளியாகியிருப்பதால் அதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடிவருகின்றனர். காலை 9 மணி காட்சிக்கு முன்னதாகவே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் மேளதாளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்தோடு திரையரங்குக்குள் சென்றனர்.
களைகட்டிய திரையரங்கம்: படத்தின் பெயர் போட ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக விஜய்யின் இண்ட்ரோ காட்சியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அவரது இண்ட்ரோ காட்சியும் எந்த அலம்பலும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

லோகேஷ் மேஜிக்: படத்தை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் அதகளம் செய்துவிட்டார். கொடுத்த பணத்துக்கு படம் ஒர்த்துதான் என்று சிலாகிக்கின்றனர். அதிலும் மாஸ்டர் படத்தில் விஜய்யை எப்படி வேறு மாதிரி நடிக்க வைத்திருந்தாரோ அதேபோல் லியோவிலும் விஜய்யை வேறு மாதிரி நடிக்க வைத்திருக்கிறார். விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கிறது எனவும் கூறினர்.
முதல் பாதி ஸ்லோதான்: அதேசமயம் படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது என்றும் இரண்டாம் பாதி பட்டாசாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் கேட்க முடிகிறது. அதேபோல் சாண்டி மாஸ்டரின் ஸ்க்ரீன் பிரசென்ஸும் அதகளமாக இருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தாலும் பார்க்க முடியாத அளவுக்கு படம் இல்லை என்ற நிம்மதியோடு ரசிகர்கள் வெளியே வருகிறார்கள்.
எல்சியூ: லியோ படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வருகிறது. இதில் கைதி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்த ஜார்ஜ் மரியம் இந்தப் படத்திலும் வருகிறார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பட ரிலீஸ்வரை லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் எல்சியூவில் வருமா வராதா என்பது குறித்து வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய சர்ப்ரைஸ்: படத்தில் உச்சக்கட்ட சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். அதாவது படத்தின் க்ளைமேக்ஸில் கமல் ஹாசன் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இதனை எதிர்பார்க்காத ரசிகர்கள் கமலின் குரலை கேட்டதும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். கமல் ஹாசன் எதற்காக வாய்ஸ் கொடுத்தார் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதேபோல் விக்ரம் படத்தில் பெரும் சர்ப்ரைஸாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சூர்யாவை லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











