என்னது 15 நிமிடங்களுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. கமல் ஹாசன் ஃபுல் ஃபார்மில் இருக்காரோ

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் கல்கி 2898 ஏடி படத்துக்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சும் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan has received a salary of 20 crore rupees for Kalki 2898 AD

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

கல்கி 2898 ஏடி: சினிமாவில் மீண்டும் பிஸியாகியிருக்கும் கமல் ஹாசன் தெலுங்கில் கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாகிறது. இதில் பிரபாஸுடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படம் பல பாகங்களாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசனின் சம்பளம்: இந்தப் படத்தில் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் தகவல்கள் பரவின. ஆனால் அது வெறும் தகவல் என்றும்; இதில் அவர் வில்லன் இல்லை மாறாக கதை போக்கில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்று இப்போது கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்துக்காக கமல் ஹாசன் 100 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கவிருக்கிறார் என்றும் ஒரு பேச்சு பலமாக அடிபட்டது. ஆனால் அதிலும் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கல்கி படத்துக்காக கமல் ஹாசன் வாங்கியிருக்கும் சம்பளம் என்று புதிய தொகை ஒன்று சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தில் அவர் மொத்தமே 15 நிமிடங்கள் மட்டுமே தோன்றுகிறார் என்றும்; அதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்றும் புதிய தகவல் ஒன்று திரைத்துறையில் ஓடுகிறது. இதனைக் கேள்விப்பட்ட திரையுலகினரும், ரசிகர்களும் என்னது 15 நிமிடங்களுக்கு 20 கோடி ரூபாயா என்று ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X