உலக நாயகனுக்கு ஆப்பு.. ரசிகர்கள் ஷாக்.. அஜித்தை ஃபாலோ செய்யும் கமல் ஹாசன்.. இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப் படம் வெளியாகிறது. மேலும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல் ஹாசன் என்றாலே எல்லோருக்கும் தெரியும். நடிப்பு, இயக்கம், நடனம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, படம் தயாரிப்பது என சினிமாவில் இருக்கும் அனைத்து ஃப்ளாட்பார்ம்களிலும் கமல் கிங். அதனால் அவரை பலரும் தங்களது ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவரை அவரது ரசிகர்கள் உலக நாயகன், ஆண்டவர் என்று அன்போடு அழைப்பார்கள். சூழல் இப்படி இருக்க அவர் தனது ரசிகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

kamal haasan thug life

கமல் ஹாசன் அறிக்கை: அந்த அறிக்கையில் அவர், "என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமா உருவாக்கம்: சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலைஞன் பெரியவன் இல்லை: கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

உலக நாயகனுக்கு நோ: எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதனால்தான் வேண்டுகோள்: இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். まあ மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக நடிகர் அஜித் குமார், 'தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம். ஏகே அல்லது அஜித் என்றே அழையுங்கள்' என்று தெரிவித்திருந்தார். இப்போது கமல் ஹாசனும், தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள்; கமல் ஹாசன் அஜித்தின் வழியை ஃபாலோ செய்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X