கதாநாயகன், வில்லன் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த்.. கமல்ஹாசன் புகழஞ்சலி!
சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
கதாநாயகன், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீகாந்த் காலமானார்
வெண்ணிற ஆடை படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஏகப்பட்ட தமிழ் படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர். வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆல்ரவுண்டர் என புகழ்ந்த கமல்
"கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்." என பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் கமல்ஹாசன்.

ரஜினிகாந்த் இரங்கல்
"என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றே ஸ்ரீகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். பல சினிமா பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு பழம்பெரும் நடிகர் மறைந்தார்
நேற்று முன் தினம் பழம்பெரும் நடிகர் நெடுமுடி வேணு காலமான நிலையில், மற்றொரு பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்
வெண்ணிற ஆடை, எதிர்நீச்சல், நவகிரகம், நூற்றுக்கு நூறு, காசேதான் கடவுளடா, வசந்த மாளிகை, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், பைரவி, நீயா, தம்பிக்கு எந்த ஊரு, பாரதி, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய ஸ்ரீகாந்தின் மறைவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











