எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு.. கே. பாலசந்தரின் 91வது பிறந்தநாளில் கமல் ட்வீட்!

சென்னை: இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 91வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தனது குருவின் பிறந்தநாளை மறக்காத சிஷ்யனான கமல்ஹாசன் அவரை நினைத்து உருகி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

மேலும், எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சிகரம்

இயக்குநர் சிகரம்

தமிழ் சினிமா உலகில் இயக்குநர் சிகரமாக போற்றப்பட்டவர் கே.பாலசந்தர். அவரது 91வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1930ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிறந்தவர் கே. பாலசந்தர். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக தனது 84வது வயதில் காலமானார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ் என தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட திறமையான ஆளுமைகளை அடையாளம் காட்டிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாளை தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர்.

கமல் உருக்கம்

கமல் உருக்கம்

கே. பாலசந்தரின் சிஷ்யனான நடிகர் கமல் தனது குருவை அவரது 91வது பிறந்தநாளில் நினைத்து உருகி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். கே. பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, வறுமையின் நிறம் சிவப்பு என ஏகப்பட்ட படங்களில் கமல் நடித்துள்ளார்.

பொன் விழா

பொன் விழா

"சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்யார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்." என நடிகர் கமல் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X