ஏழை மருத்துவ மாணவிக்கு உதவிய கமல் ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஏழை மருத்துவ மாணவிக்கு உதவியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவிக்கு உதவியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி மருத்துவம் படித்து வந்தார். கூலி வேலைகளுக்குச் சென்றும், கடன் பெற்றும் மாணவியின் பெற்றோர் கல்விச்செலவை கவனித்து வந்தனர்.
வறுமை வாட்டியதால் வேறு வழியில்லாமல், கனிமொழியும் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அதனால் இறுதியாண்டு படிக்கும் கனிமொழியின் மருத்துவக் கனவு கேள்விக்குறியானது.
இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கனிமொழிக்கு பலரும் உதவ முன்வந்துள்ளனர். அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கனிமொழியை நேரில் சந்தித்து, நிதியுதவி அளிப்பதாகவும் செவித்திறன் குறைபாடுடைய கனிமொழியின் சகோதரிக்கும் மருத்துவ சிகிச்சையளிப்பதாகவும் உறுதியளித்தார்.
பிறகு, சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம், மாணவியின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கிறோம் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











