ட்விஸ்ட்.. கமல் சொன்ன அந்த விசயம்.. இன்னைக்கு எவிக்ஷன் இருக்கா? இல்லையா? தாத்தா சேவ் ஆனா ஹேப்பி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சோமசேகர் வெளியேறுவார் என்கிற தகவல்கள் வந்த நிலையில், அதில் ஒரு சூப்பர் ட்விஸ்ட்டாக இறுதியில் சுரேஷ் தாத்தா தான் வெளியேறுகிறார் என்கிற தகவல் பரவியது.

Recommended Video

பாலாவிற்கு மட்டும் தனி சலுகைகள், கமல் காட்டம் | Bigg boss 4 Tamil

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் யாரையும் சேவ் பண்ணாத கமல், இந்த வாரம் எல்லாருமே சேவ் தான் என தனது பிறந்தநாளை முன்னிட்டு கூறினார்.

ஆனால், நாளைக்கு சொல்றேன் என கடைசியா ஒரு ட்விஸ்ட்டையும் வச்சிட்டு போனதால? இந்த வாரம் எவிக்ஷன் இருக்கா? இல்லையா? என்கிற சந்தேக மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டனர்.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் ஏகப்பட்ட ரசிகர்கள் மனங்களை கவர்ந்த சூப்பர் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை இவ்ளோ சீக்கிரமா வெளியே அனுப்பப் போறாங்க என்கிற தகவல் வந்த உடனே பிக் பாஸ் ரசிகர்கள் தங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் கொட்டித் தள்ளினர்.

மக்கள் தீர்ப்பு கிடையாது

மக்கள் தீர்ப்பு கிடையாது

ஒரு வேளை சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால், அது நிச்சயமாக மக்களின் தீர்ப்பு கிடையாது என்றும், பிக் பாஸ் சீட்டிங் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் வெளிப்படையாக கமெண்ட்டுகளை போட்டு, விஜய் டிவியின் ஓட்டு மோசடியை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

பார்க்க மாட்டோம்

பார்க்க மாட்டோம்

சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினால், அதுக்கு மேல அந்த ஷோவை பார்க்கவே மாட்டோம். அவர் தான் யாருக்கும் ஃபேவர் ஆகவோ, எந்த க்ரூப்பிலும் சேராமலும், கேமை கேமாக எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடுகிறார் என்றும், நிச்சயம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டால் டி.ஆர்.பி சரிவை சந்திக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

மிக்சர் பீஸ்கள்

மிக்சர் பீஸ்கள்

மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏகப்பட்ட மிக்சர் பீஸ்களை இன்னமும் அந்த நிகழ்ச்சி ஏன் காப்பாற்றி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை பார்க்க வச்சதே அந்த மனுஷன் தான். வயசானவங்களை அனுப்பிவிட்டு, சின்ன பசங்கள வச்சி லவ் டிராக்குன்னு கோர்த்து விட்டு விளையாட்டுன்னு சொல்றதுக்கு பேரு கேம் கிடையாது வேற என்றும் திட்டி வருகின்றனர்.

யாரையும் சேவ் பண்ணல

யாரையும் சேவ் பண்ணல

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவாக நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில், 7 எவிக்‌ஷன் லிஸ்ட் போட்டியாளர்களில் யாரையுமே கமல் சேவ் பண்ணல. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் கலந்து கொண்ட கமல் அங்கே ஒரு போட்டியாளரை சேவ் பண்ண நிலையில், இங்கே யாரையுமே ஏன் சேவ் பண்ணல என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

எவிக்‌ஷன் இருக்கா? இல்லையா?

எவிக்‌ஷன் இருக்கா? இல்லையா?

மேலும், தனது பிறந்தநாளை முன்னிட்டு யாருமே எவிக்‌ஷன் இல்லை என்பது போல பேசிய கமல், வழக்கம் போல கடைசியில் ஒரு ட்விஸ்ட்டையும் வைத்து விட்டார். நாளைக்கு இருக்கலாம் என்று கூறி மொத்த பேரையும் பீதி அடைய வைத்துள்ளார். கமல்ஹாசனின் அந்த வார்த்தையால், இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்குமா? இருக்காதா? என்கிற கேள்வியும், சுரேஷ் தாத்தாவை சீக்ரெட் அறையில் வைப்பார்களா? என்கிற சந்தேகமும் எழுந்து உள்ளது.

இருந்தா நல்லா இருக்கும்

இருந்தா நல்லா இருக்கும்

நாகார்ஜுனாவே என்ன கமல் சார் உங்க வீடு ஹவுஸ்ஃபுல்லா இருக்கு என கலாய்த்த நிலையில், இன்னமும் 16 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் நிரப்பி வைத்துக் கொண்டிருப்பதையும் ரசிகர்கள் விரும்பவில்லை. இன்று யாரையாவது வெளியேற்ற வேண்டும் என விரும்பும் ரசிகர்கள், ஆனால், அந்த போட்டியாளர் சுரேஷாக இருக்கக் கூடாது என்றும் விரும்புகின்றனர். பார்க்கலாம் இன்னைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X