இந்தியன் 2 படத்தில் இதற்காகத்தான் நடித்தேன்.. அந்த படம் அப்படி இருக்கும்.. கமல்ஹாசன் உறுதி!

சென்னை: இந்தியன் 2 படத்தை எப்படியாவது வெற்றி படமாக மாற்றி விட வேண்டும் என இயக்குநர் ஷங்கர் பல்வேறு நாடுகளுக்கு படக்குழுவினரை அழைத்துச் சென்று புரோமோட் செய்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் இன்றைக்கு பார்த்தாலும் ஒரு மாஸ்டர் பீஸ் ஆகவே இருக்கும். பாடல்கள் தொடங்கி படத்தின் கதை, நடிப்பு, மேக்கப் என அனைத்துமே மிரட்டி விடும்.

Kamal Haasan Indian 2 Shankar 2

இந்தியன் 2 திரைப்படத்தை அதைவிட பிரமாண்டமாக ஷங்கர் உருவாக்கியுள்ள நிலையில் ஒரு ஜூலை 12-ம் தேதி அந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் சமீபத்திய பேச்சுகள் அவரது ரசிகர்கள் மத்தியிலே இந்தியன் 2 படத்துக்கான எதிர்பார்ப்பை விட இந்தியன் 3 படத்துக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.

பில்டப் முக்கியம்: பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் கதையாகவும் கருவாகவும் எதுவுமே பெரிதாக இல்லாத நிலையிலும் மகாபாரதத்தை காப்பி அடித்து ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்களை மேக்கிங்கிற்காக பயன்படுத்திக் கொண்டு பிரபாஸை வைத்து எந்த அளவுக்கு பில்டப் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பில்டப் கொடுத்து கல்கி படத்தை வெற்றி படமாக மாற்றி விட்டனர். அதே போல இந்தியன் 2 படத்துக்கான பில்டப் வேலைகளையும் வெளிநாடுகளில் புரமோஷன்களை நடத்தி செய்து வருகின்றனர்.

இந்தியன் 3 தான் பிடிக்கும்: இந்தியன் 2 படத்தை விட தனக்கு இந்தியன் 3 திரைப்படம் தான் ரொம்பவே பிடிக்கும் என கமல்ஹாசன் பேசியுள்ளார். அந்தப் படத்தின் கதை காரணமாகத்தான் இந்தியன் 2 படத்திலேயே நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்துக்கான பில்டப் வேலைகளை பண்ணாமல் அடுத்ததாக ரிலீசாகப் போகும் இந்தியன் 3 பற்றி கமல் பேசி வரும் நிலையில், இந்தியன் 3 படத்துக்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரித்து விட்டது.

இதுக்கு மேல முடியாது: இந்தியன் 3 முடித்து விட்டு இந்தியன் 4, 5 எல்லாம் வருமா? என சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் அய்யய்யோ இந்தியன் 2 படத்துக்கே 4 மணிக்கு அலாரம் எல்லாம் வைத்து மேக்கப் போட்டு நடித்து கஷ்டப்பட்டு விட்டேன். இதற்கு மேல் முடியாது. இந்தியன் 2 மற்றும் 3 முதலில் ரசிகர்களுக்கு பிடிக்கட்டும் என கமல் பதிலளித்திருந்தார். பல நூறு கோடி பட்ஜெட்டில் ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு வெயிட்டான இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமையும் என ஒட்டுமொத்த கோலிவுட்டே எதிரபர்த்து காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X