கமலுக்கே இஷ்டமில்லை.. தாமரை வெளியேற்றத்தால் கடுப்பான பிக் பாஸ் ஹோஸ்ட்.. அந்த சாவி பத்திரம்!

சென்னை: இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபரிடம் இதுவரை நீங்க வந்ததே பெரிய சாதனை தான் என சொல்லி வந்த நிலையில், தாமரையிடம் மட்டும் இது வெற்றி என நினைக்கக் கூடாது, இதை விட பெரிய வெற்றியை அடைய வேண்டும் என தனது மனதில் உள்ளதை பளிச்சென சொல்லி தாமரையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

யார் வேண்டுமானாலும் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணலாம் என்கிற நிலை நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் நடந்திருக்கும் அது மிஸ் ஆகிடுச்சே என பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டான கமல்ஹாசனே வருத்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை ஷாக்காக்கியது.

யாரோ எதோ பண்ணிட்டாங்க என சொன்ன கமல் மக்கள் மீது தப்பு சொல்ல முடியாது என பேசியதில் இருந்தே இந்த எவிக்‌ஷன் கமலுக்கே விருப்பமில்லாமல் நடந்திருக்கிறது என தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பெயரை பார்த்தவுடனே

பெயரை பார்த்தவுடனே

பிரியங்காவை ஹேப்பியாக சேவ் பண்ண கமல் அடுத்து பாவனி மற்றும் தாமரை இருவரில் யார் வெளியேற போகிறார் என பார்த்து விடலாம் என எவிக்‌ஷன் கார்டை பார்த்ததுமே டென்ஷன் ஆகி விட்டார். அதில், தாமரைச்செல்வி பெயர் இருந்தது கமல் சாருக்கே பிடிக்கவில்லை என்பது அவரது உடல்மொழி மற்றும் பேச்சில் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அந்த சாவி பத்திரம்

அந்த சாவி பத்திரம்

பணப்பெட்டி வந்ததும் அதை எடுக்காமல் இதற்கு மேல் வெளியே போய் சம்பாதித்துக் கொள்வேன் என சொன்னீங்க பார்த்தீங்களா? அந்த சாவியை மட்டும் தொலைக்காமல் பார்த்துக்கோங்க.. என்னிடமும் அதே போல ஒரு சாவி இருக்கு.. மக்கள் மீதான நம்பிக்கை. அது உங்களிடத்திலும் உள்ளது நிறைய சாதனைகளை படைப்பீங்கன்னு வெகுவாக பாராட்டினார்.

யார் வேணா ஜெயிக்கலாம்

யார் வேணா ஜெயிக்கலாம்

இந்த சீசனில் இதுவரை வந்த நீங்க இந்த வாரம் வெளியேறுவது எனக்கே அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்கிற ஒரு தாக்கத்தையே உங்களது வெற்றி உருவாக்கி இருக்கும். ஆனால், எங்கே, யாரோ மிஸ் பண்ணிட்டாங்க என கமல் வெளிப்படையாகவே பல விஷயங்களை பேசியது போலவே தெரிந்தது.

15 படம் பண்ண மாதிரி

15 படம் பண்ண மாதிரி

இப்பவே பத்து பதினைந்து படங்கள் நடித்து ஹிட் கொடுத்தது போலத்தான் உங்களுக்கான வரவேற்பு இருக்கு.. வெளியே போயும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தாமரை செல்விக்காக தன்னையே மறந்து கமல்ஹாசன் ஓப்பன் அப் ஆகி பேசியது போலவே இருந்ததாக ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதை விட பெரிய வெற்றி

இதை விட பெரிய வெற்றி

பெரும்பாலும் கமல் சார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நீங்க வந்ததே பெரிய விஷயம் தான் நீங்கள் பெரிய வெற்றி அடைந்து விட்டீர்கள். பெரிய அண்ணாச்சி ஆகிட்டீங்க என வெறுமனே பாராட்டித் தள்ளுவார். ஆனால், தாமரை நான் இப்பவே ஜெயிச்சிட்டேன் சார் என சொன்னதும் அப்படியெல்லாம் சொல்லி நின்று விடாதீர்கள் இதை விட பெரிய வெற்றி அடைய வேண்டும் அந்த முனைப்புடன் இருங்க என உற்சாகப்படுத்தி அனுப்பியது தாமரை ரசிகர்களை ஆறுதல் படுத்தும் நோக்கத்திலா அல்லது ஆழ்மனதில் இருந்தே வந்த வார்த்தைகளா என புரியாமல் ரசிகர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X