Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறிய நிலையில் இன்று பிக்பாஸில் பங்கேற்கிறாரா கமல்ஹாசன்?
சென்னை: சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பப்படும் என நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசன் முதலே தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி அமெரிக்கா சென்று திரும்பினார் கமல்ஹாசன்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அடுத்த நாளே இருமல் காய்ச்சல் என பாதிக்கப்பட்டார் கமல்.
முருங்கைக்காய்
சிப்ஸ்
படத்திற்கு
ஏ
சான்றிதழ்
கிடைக்கும்
என்று
தெரியாது...
அதுல்யா
ரவி
வெளிப்படை

மருத்துவமனையில் அனுமதி
இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல். இதனால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

படப்பிடிப்பில் பங்கேற்பு
இதையடுத்து நடிகை ரம்யா கிருஷ்ணன் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 4ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் ஆன கையோடு நேரடியாக ஈவிபி பிலிம் சிட்டிக்கு சென்ற கமல்ஹாசன் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

நோட்டீஸ் அனுப்படும்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் படப்பிடிப்பில் பங்கேற்றது சர்ச்சையானது.இதையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

எந்த சிக்கலும் இல்லை
ஆனால் அடுத்த நாளே கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த சிக்கலும் இல்லை என தெரிகிறது.