BB7: நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. எம்ஜிஆர் பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7!

சென்னை: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சற்று முன் கோலாகலமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்து இருக்கின்றனர்.

Kamal Haasan hosted Bigg Boss Tamil season 7 grand opening

இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு பஞ்சாயத்திற்கும்,சுவாரசியத்திற்கும் பஞ்சமே இருக்காது.

பிக் பாஸ்: 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயணம், 6 சீசன்களைக் கடந்து இன்று 7 ஆவது சீசனில் களமிறங்குகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது, இது ஒரு புதிய வகையான பொழுதுபோக்கை கொண்டு வந்து, முதல் சீசன் அபார வெற்றி பெற்றது. ஓவியா மற்றும் ஜூலியைச் சுற்றிய சர்ச்சைகள் காரணமாக முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பரபரப்புக்கு பஞ்சமில்லை: ஆனால்,ஆண்டுகள் செல்ல செல்ல நிகழ்ச்சிக்கான ஆர்வம் மெதுவாகக் குறைந்தது. இருந்த போதும், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் பார்க்கப்படும் தமிழ் நிகழ்ச்சியாகமாறியது. பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பரபரப்பு ஆகியவற்றால், 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கி உள்ளது.

கடந்த சீசனில் சர்ச்சை:கடந்த சீசனில் நடிகரான முகமது அசீம் டைட்டிலை வென்றார், இரண்டாம் இடம் விக்ரமன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பெண்களை அவமதித்த அசீமுக்கு எப்படி டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. கடந்த சீசனும், எல்லா சீசன்களையும் போலவே, சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்தது.

பிக் பாஸ் சீசன் 7: இந்நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 7நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில், நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என எம்ஜிஆர் பாடலுடன் கமல்ஹாசன் படுக்கையில் இருந்து எழுந்து ரெடியாகும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6 சீசன்களாக, ஒரே வீட்டில் நடந்து வந்த இந்த நிகழ்ச்சி இந்த முறை இரண்டு வீட்டில் நடக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமல் டவுள் ஆக்ஷனில் வந்து பிக் பாஸ் வீட்டை சுற்றிக்காட்டுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X