Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த வீட்ல கிசுகிசு பேச முடியாது.. படுக்கையறையில் படுத்துக் கொண்டு கமல் பேசும் வேற லெவல் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து புரமோக்களாக போட்டுத் தள்ளி புரமோஷன் வேலைகளில் விஜய் டிவி தீவிரம் காட்டி வருகிறது.
சி.எஸ்.கே ஜெர்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… ஆர்வத்தில் ரசிகர்கள்!
கமல்ஹாசன் படுக்கையறையில் படுத்துக் கொண்டு பிக் பாஸ் வீடு குறித்து பேசும் அட்டகாசமான புதிய புரமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
படுக்கையறையில் கமல்
சர்வைவர் தமிழில் மூழ்கி இருக்கும் ரசிகர்களை மீண்டும் பிக் பாஸ் பக்கம் திருப்ப சரியான நேரத்தில் புதிய புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. முதல் புரமோவில் கல்யாண வீடு செட்டப் இருந்தது, இரண்டாவது புரமோவில் சமையல் அறையில் இருந்த கமல் மூன்றாவது புரமோவில் படுக்கையில் படுத்துக் கொண்டு பிக் பாஸ் வீடு பற்றி பேசுகிறார்.
யாருப்பா அது
உலகநாயகன் கமல்ஹாசன் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்க அவரது காதுகளுக்கு கிசுகிசு பேசும் சத்தம் கேட்கிறது. யாருப்பா அது என கமல் கேட்க அது பக்கத்து வீட்டில் இருந்து வரும் சத்தம் என்பதை உணர்ந்து கொண்ட கமல் யாருக்கும் தெரியாமல் கிசுகிசு பேசுகிறோம் என நினைத்து ஊருக்கே தெரியும்படி பேசுகின்றனர் என பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கம் சென்று விடுகிறார்.
கிசுகிசு பேச முடியாது
மேலும், கமல் பிக் பாஸ் வீடு குறித்து பேச இன்னொரு குரல் யாருப்பா அங்க பேசுறது என குரல் கொடுக்க, இந்த வீட்டில் கிசுகிசு பேச முடியாது போல என பேசியபடியே அமைதியாக படுத்துத் தூங்கும் வேற லெவல் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சர்வைவர் போட்டியாக இருக்குமா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு சர்வைவர் தமிழ் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வைவர் நிகழ்ச்சியில் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டாலும் நிகழ்ச்சியில் ரியாலிட்டி இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இப்போதுதான் முதல் வாரமே என்பதால் போக போக நிகழ்ச்சி எப்படி சூடு பிடிக்கிறது என்பதை பொறுத்துத் தான் பிக்பாஸுக்கும் அதற்கும் இடையேயான போட்டி இருக்கும் என கூறுகின்றனர்.
ரசிகர்கள் நம்பிக்கை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோக்களை பார்த்த ரசிகர்கள் எல்லாமே தரமாக உள்ளதாகவும் இம்முறை புரமோவை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியும் நல்லா இருந்தா தான் சர்வைவ் பண்ண முடியும் என்றும் கடந்த ஆண்டை போல சொதப்பி விட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!