லைகாவின் முயற்சி எல்லாம் வீண்! காத்து வாங்கும் இந்தியன் 2! வசூல் விபரம்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 7 நாட்கள் ஆகின்றது. படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் கடைசியாக ரிலீஸ் செய்த படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால் லைகா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினையே சந்தித்து வருகின்றது. இப்படியான நிலையில் இந்தியன் 2 படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு இந்தியன் 2 படத்தின் வசூல் அமைந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக புரோமஷன் செய்யப்பட்டது. மேலும் படத்தின் ட்ரைலரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தும் படியாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
டெம்ளேட்: மேலும், ஒரு தவறுக்கு கொலைதான் தீர்வு என்பதை ஷங்கர் தனது அனைத்து படங்களிலும் ஒரு டெம்ளேட்டாகவே பின்பற்றி வருவதும் சலிப்பையே ஏற்படுத்துகின்றது. படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் கமல்ஹாசனின் வேடங்கள் மற்றும் இசைதான். படம் ரிலீஸ்க்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் இசை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்திருந்தனர். ஆனால் படத்தினை ஓரளவிற்கு ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து பார்க்க காரணங்களில் அனிருத்தும் ஒருவராக உள்ளார்.
ரீ எடிட்: இப்படியான நிலையில், படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருக்கின்றது எனக் கூறி, படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சிகளை படக்குழு வெட்டி எடுத்தது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியானது. இதனால் படத்தினைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என கருதப்பட்டது. ஆனால் லைகா நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
வசூல்: முதல் 6 நாட்களில் படம் மொத்தம் ரூபாய் 68.45 கோடிகளை வசூல் செய்தது என தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தகவல் வெளியிடவில்லை. 7வது நாளில் இந்தியா முழுவதும் படம் இரண்டு கோடி ரூபாய்களை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் இதுவரை மொத்தம் ரூபாய் 70.45 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











