படத்தை ஓடவைக்க படாத பாடு படும் லைகா! செல்ஃப் எடுக்காத இந்தியன் தாத்தாவின் வசூல் விபரம்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது ஜூலை 19ஆம் தேதியுடன் 8 நாட்கள் ஆகின்றது. படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் கடைசியாக ரிலீஸ் செய்த படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால் லைகா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினையே சந்தித்து வரும் நிலையில் இந்தியன் 2 படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு இந்தியன் 2 படத்தின் வசூல் அமைந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கப்பட்டபோது இரண்டாவது பாகம் மட்டுமே திட்டமிட்டப்பட்டது. அதன் பின்னர் ஷங்கர் தரப்பில் இருந்து மூன்றாம் பாகத்திற்கு பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Indian 2 Box Office Collection Kamal Haasan 2

படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக புரோமோஷன் செய்யப்பட்டது. குறிப்பாக துயாபில் நடுவானில் விமானத்தில் இருந்து குதித்து படத்தின் போஸ்டரைக் காட்டியெல்லாம் புரோமோஷன் செய்யப்பட்டது. மேலும் படத்தின் ட்ரைலரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் படியாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

படத்தின் ப்ளஸ்: படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் கமல்ஹாசனின் வேடங்கள் மற்றும் இசைதான். படம் ரிலீஸ்க்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் இசை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்திருந்தனர். ஆனால் படத்தினை ஓரளவிற்கு ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து பார்க்க காரணங்களில் அனிருத்தும் ஒருவராக உள்ளார்.

ரீ எடிட்: இப்படியான நிலையில், படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருக்கின்றது எனக் கூறி, படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சிகளை படக்குழு வெட்டி எடுத்தது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியானது. இதனால் படத்தினைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என கருதப்பட்டது. ஆனால் லைகா நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. படம் வெளியாகி நேற்றுடன் 8 நாட்கள் ஆகிவிட்டதால் இந்தப் படம் இந்தியா முழுவதும் 100 கோடியாவது வசூல் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வசூல் விபரம்: முதல் 7 நாட்களில் படம் மொத்தம் ரூபாய் 70.4 கோடிகளை வசூல் செய்தது என தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தகவல் வெளியிடவில்லை. 8வது நாளில் இந்தியா முழுவதும் படம் ரூபாய் 1.15 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் இதுவரை மொத்தம் ரூபாய் 71.55 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X