Indian 2: கல்கியை ஓரம்கட்டுமா இந்தியன் 2.. முன்பதிவில் கெத்தாக வசூல் வேட்டையைத் தொடங்கிய ஆண்டவர்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் புதுபுது ஐடியாக்களைக் கொண்டு வருவார். இப்படி சினிமாவின் என்சைக்ளோபிடியாவாகவும் பல்கலைக் கழகமாகவும் இருக்கின்றார். அதனால்தான் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிக்கின்றார்.

இப்படியான நிலையில் இவர் தற்போது சினிமாக்களில் மிகவும் மும்முரமாக நடித்துக் கொண்டு இருக்கின்றார். இவரது நடிப்பில் தற்போது கல்கி 2898 ஏ.டி என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கின்றார். இந்தப் படத்தில் மிகவும் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே வந்தாலும் வந்த காட்சிகளில் மிரட்டிவிடுகின்றார் கமல். இதையடுத்து இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் இந்தியன் 2. அதேநேரத்தில் தக் லைஃப் என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.

Kamal Haasan Indian 2 Anirudh 2

லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இப்படியான நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதத்தின் தொடக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடைபெற்று வருகின்றது.

Kamal Haasan Indian 2 Anirudh 2

2500 டிக்கெட்டுகள்: இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு இன்னும் இந்தியாவில் தொடங்கப்படாத நிலையில், அமெரிக்காவில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை சுமார் 2500க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் ரிலீஸ்க்கு இன்னும் 12 நாட்கள் இருப்பதால் முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kamal Haasan Indian 2 Anirudh 2

அமெரிக்காவில் வசூல் வேட்டை: இந்தியன் 2 திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் இருக்ககூடிய இந்தியர்களுக்கு கட்டாயம் இந்தபடம் பிடிக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றது. இதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் உலகம் முழுவதும் தெரிந்த நடிகர் என்பதால் அவருக்காகவே இந்த படத்தினை வந்து பார்க்கும் ரசிகர்கள் இருப்பார்கள் என படக்குழு நம்புகின்றது. இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள 2500 டிக்கெட்டுகளின் மூலம் அமெரிக்காவில் இதுவரை 65,200 டாலர்கள் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 54 லட்சங்கள் இதுவரை வசூல் செய்துள்ளது என ஆங்கில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் இந்தியன் 2: படத்தின் புரோமோசன் வேலைகளுக்காக படக்குழு மலேசியாவுக்குச் சென்றது. மலேசியாவுக்குச் சென்றபோது மலேசியாவின் பிரதமர் அன்வர் பிராஹிமைச் சந்தித்தார் கமல்ஹாசன். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்த கமல்ஹாசன் மலேசியா பிரதமருடன் ஊழல் ஒழிப்பு தொடர்பாக பேசியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Kamal Haasan Indian 2 Anirudh 2

புரோமோஷன்: மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற படக்குழு ரசிகர்களைச் சந்தித்து படத்திற்கு புரோமோஷன் செய்தனர். இந்நிலையில் மலேசியாவின் மிகவும் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்ககூடியதும் மலேசியாவின் தலைநகருமான கோலாலம்பூருக்குச் சென்றபோது, புரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்ட குழுவினருடன் படக்குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் இருந்த பெண் ஒருவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகை போல் தெரிகின்றது.

Kamal Haasan Indian 2 Anirudh 2

லிஃப்ட் போட்டோ: கமல்ஹாசனுடன் லிஃப்ட்டில் சென்றபோது அந்த ரசிகை தனது முகத்தை மறைத்தபடி கமல்ஹாசனுடன் லிஃப்ட்டில் இருந்த கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இப்போது இந்த புகைப்படத்தினை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X