இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது?.. அடுத்தடுத்து வெளியான அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி !

சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து அடுத்தடுத்து வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கமலின் மிரட்டலான நடிப்பை பார்த்து மிரட்டு போன ரசிகர்கள், கமலின் இந்தியன் 2 படம் குறித்து கேட்டு வருகின்றனர்.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

இந்தியன்

இந்தியன்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் "இந்தியன்" இந்தப் படத்தில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை, பின்னணி பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பலவிதமான திறமைகளை கொண்டவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து வெளியானது.

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் கமலஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கிரேன் விழுந்து விபத்து

கிரேன் விழுந்து விபத்து

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, ஷங்கருக்கும் லைக்கா நிறுவனத்திற்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் படத்தை தொடங்கும் வேலையை படக்குழு வெளியிட்டுள்ளதாகவும், முதல் வேலையாக படத்தின் பட்ஜெட்டைக் குறைக்கும் படி லைகா தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே படத்தின் பட்ஜெட்டில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil
ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும், தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் RC15 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சி மட்டுமே இருப்பதால், இந்தியன் 2 படத்தையும், ராம்சரண் படத்தையும் சேர்த்து ஒரே நேரத்தில் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X