உலகநாயகனுக்கே இந்த நிலைமையா? யாருக்குப்பா ஷோ போட்டீங்க? காத்து வாங்கும் இந்தியன் 2 - வீடியோ

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் கடைசியாக ரிலீஸ் செய்த படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால் லைகா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தினையே சந்தித்து வரும் நிலையில் இந்தியன் 2 படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு இந்தியன் 2 படத்தின் வசூல் அமைந்துள்ளது.

இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கப்பட்டபோது இரண்டாவது பாகம் மட்டுமே திட்டமிட்டப்பட்டது. அதன் பின்னர் ஷங்கர் தரப்பில் இருந்து மூன்றாம் பாகத்திற்கு பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Indian 2 Kamal Haasan 2

படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக புரோமஷன் செய்யப்பட்டது. குறிப்பாக துபாயில் நடுவானில் விமானத்தில் இருந்து குதித்து படத்தின் போஸ்டரைக் காட்டியெல்லம் புரோமோசன் செய்யப்பட்டது. மேலும் படத்தின் ட்ரைலரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தும் படியாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது வீம்புக்கு திரையரங்கில் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றது என விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமைக்கு லைகா நிறுவனம் வந்து விட்டது.

இசைதான் காரணம். படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் கமல்ஹாசனின் வேடங்கள் மற்றும் இசைதான். படம் ரிலீஸ்க்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் இசை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்திருந்தனர். ஆனால் படத்தினை ஓரளவிற்கு ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து பார்க்க காரணங்களில் அனிருத்தும் ஒருவராக உள்ளார்.

ரீ எடிட்: இப்படியான நிலையில், படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருக்கின்றது என ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் படத்தின் நீளத்தைக் குறைக்கும் பொருட்டு படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சிகளை படக்குழு வெட்டி எடுத்தது. இது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியானது. இதனால் படத்தினைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என கருதப்பட்டது. ஆனால் லைகா நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

ரசிகர்களைக் காணோம்: ஏற்கனவே இந்தியன் 2 படம் குறித்து கவலையை ஏற்படுத்தும் தகவல்களாகவே உலா வந்து கொண்டு இருக்கையில், தற்போது மேலும் கவலை அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. அதாவது தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோவில், இந்தியன் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் காலியாக உள்ளது. இந்த வீடியோவை எடுத்த நபர் மட்டும் திரையரங்கில் இருந்திருப்பார் என இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பதிவிட்ட இணையவாசியோ, படத்திற்கு சரியான நேரத்திற்கு வராமல் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என கிண்டலாக கேப்ஷன் இட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X