Indian 2: அம்மாடியோவ்.. துபாயில் இப்படியொரு புரோமோசனா? இந்தியன் 2க்கு கூடும் மவுசு!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ப்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார், இப்படி சினிமாவின் அனைத்து தளங்களிலும் கால் பதித்துள்ளார். சினிமாவில் புதுபுது ஐடியாக்களைக் கொண்டு வருவார். இப்படி சினிமாவின் என்சைக்ளோபிடியாவாகவும் பல்கலைக் கழகமாகவும் இருக்கின்றார். அதனால்தான் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிக்கின்றார்.
கமல்ஹாசன் அரசியல் களத்தில் இருந்தாலும் சினிமாக்களிலும் மிகவும் மும்முரமாக நடித்துக் கொண்டு இருக்கின்றார். இவரது நடிப்பில் தற்போது கல்கி 2898 ஏ.டி என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மிகவும் குறைந்த அளவிலான நேரம் மட்டுமே வந்தாலும் வந்த காட்சிகளில் மிரட்டிவிடுகின்றார் கமல். இதையடுத்து இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் இந்தியன் 2. அதேநேரத்தில் தக் லைஃப் என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்தியன் 2: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் பல்வேறு கலைஞர்கள் நடித்திருந்தாலும், படத்தில் நடித்த நெடுமுடி வேணு, விவேக் மற்றும் மனோபாலா ஆகியோர் மறைந்து விட்டனர். இவர்கள் மூவரையும் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார். படத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துவிட்டது.
புரோமோசன்ஸ்: லைகா புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்துக்கான புரோமஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதத்தின் தொடக்கத்தில் மிகவு பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடைபெற்று வருகின்றது.

நடுவானில் புரோமோசன்ஸ்: இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் துபாயில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தினை வெளிநாடுகளில் இதுவரை கலெக்ஷன் செய்த படங்களை விடவும் அதிகப்படியான வசூலைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநரும் தயாராப்பு தரப்பில் இருந்தும் மிகத்தீவிரமாக புரோமோசன் செய்து வருகின்றனர். இந்நிலையில் துபாயில் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் வேற லெவல் புரோமோசன் என பாராட்டி வருகின்றனர்.
நடுவானில் பறக்கவிடப்பட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டரில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் இருக்கும் புகைப்படமும், இயக்குநர் ஷங்கரின் புகைப்படமும் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான லைகா புரடெக்ஷன்ஸின் சுபாஸ்கரன் ஆகியோரது புகைப்படம் உள்ளது.



Click it and Unblock the Notifications











