Kamal Haasan: அமரன் வெற்றி விழாவில் சூர்யா, தனுஷை அட்டாக் செய்த கமல்ஹாசன்.. நன்றி சொன்ன சாய் பல்லவி!
சென்னை: கமல்ஹாசன் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தின் 100வது நாள் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசுகையில் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல் அவர்களை அட்டாக் செய்து பேசினார்.
அமரன் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பினை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அவரது நடிப்புக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறினார்கள். இப்படி இருக்கும்போது, சாய் பல்லவி தமிழில் அதிக படங்களில் கமிட் ஆவது இல்லை. அதற்கு காரணம், அவருக்கு நடந்த சில கசப்பான அனுபவங்கள் தான் என கூறப்படுகிறது. அதாவது, தனுஷ் உடன், அவர் மாரி 2 படத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்த பல காட்சிகள், படத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்த என்.ஜி.கே படத்திலும் இவரது பல காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டது. தான் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் படத்தில் இடம் பெறாததால், தமிழ் படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் இருந்தார்.

அமரன் படத்தில் நடித்து முடித்த பின்னரும் கூட, படத்தின் புரோமோசன்களின் போது, படத்தில் அவர் நடித்த காட்சிகள் இருக்கிறதா? இல்லை எடிட்டிங்கில் தூக்கிவிட்டீர்களா என இயக்குநரிடம் பலமுறை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். அதற்கு காரணமும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான். அப்படி இருக்கும்போது, அமரன் படத்தில் இவர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் அப்படியே இருந்துள்ளது. மேலும் இவரது நடிப்புக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது. இதனால், சாய் பல்லவி பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
சூர்யா - தனுஷ்: அமரன் படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது கூட, " சாய் பல்லவி, நீங்க நடித்த காட்சிகள் எல்லாம் அப்படியே வரும். அதற்கு ஒப்புதல் அளிக்க கூடிய கதாநாயகர்களும் இங்கே இருக்கிறார்கள். ஏனென்றால் நாங்க கமல் சார் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள்" என பேசினார். அதன் பின்னர் கமல் ஹாசன் பேசும்போது, தனுஷ் மற்றும் சூர்யாவை அட்டாக் செய்து பேசினார்.
கமல்: அவரது பேச்சில், " சாய் பல்லவி என்னிடம் பேசும்போது, என்னை வெறும் ரௌடி பேபி ஆகவே நினைத்துக் கொண்டு உள்ளார்கள். அதை மாற்றி விட்டீர்கள் எனக் கூறினார். எனக்குத் தெரியும் நீங்கள் ரௌடி பேபி மட்டும் இல்லையென. சின்ன படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், நீங்கள் பேசப்பட்டீர்கள். அது தான் உங்கள் திறமைக்கான பெரிய உதாரணம். அந்த படத்தின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும் உங்களுக்கு (சாய் பல்லவி) பெயர் வந்துள்ளது என்றால், படத்தை எடுத்தவர்கள் கவலை படுவார்கள்" என பேசினார். இவரது பேச்சைக் கேட்ட சாய் பல்லவி சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் நன்றி கூறினார்.
ரசிகர்கள்: கமல் ஹாசனின் பேச்சை கவனித்த பலரும் அவர் சூர்யா மற்றும் தனுஷைத்தான் கமல்ஹாசன் அட்டாக் செய்துள்ளார். மேலும் வேண்டும் என்றேதான் அவர்களின் பெயரைச் சொல்லாமல் விட்டுள்ளார் என கூறி வருகிறார்கள். மேலும் பலர் கமல்ஹாசன் பேசியதை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











