இதுதான் வாழைப்பழத்துல ஊசி ஏத்துறது.. அர்ச்சனா பாலா திடீர் உறவு.. ரியோவை வச்சு காய் நகர்த்திய கமல்!
சென்னை: அர்ச்சனா, பாலா உறவு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், ரசிகர்கள் என்ன நினைக்கிறாங்க, நம்ம ரியோ என்ன நினைக்கிறாருன்னு கமல் கேட்ட அட்டகாசமான 3வது புரமோ இப்போ வெளியாகி வைரலாகி வருகிறது.
அர்ச்சனாவின் குரூபிசத்தை தைரியமாக எதிர்த்து கேட்ட பாலா மக்கள் மத்தியில் சட்டென ஹீரோவானார்.
ஆனால், உடனே அர்ச்சனாவின் பாச வலையில் விழுந்த உடனே மறுபடியும் பாலா மீது அதிருப்தி உருவானது.

தரமான சம்பவம்
வார இறுதியானாலே நம்ம சின்ராசு றெக்க கட்டிப் பறப்பாரு என்பது போல, கமல் சார் போட்டியாளர்களை மக்கள் பிரதிநிதியாக கலாய்ப்பதே தெரியாமல் கலாய்ப்பதும், டபுள் மீனிங்கில் அரசியல் புரமோஷன் செய்வதுமாக அட்டாகசம் பண்ணி வருகிறார். இன்றும் கமல் ட்ரீட் இருக்கு என்பதை வெளியான 3 புரமோக்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

திடீர் பாசம்
அர்ச்சனாவுக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் அடிதடி சண்டை நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பாசமலர் பார்ட் 2 போட்டுக் காட்டி பிக் பாஸ் ஏமாத்திவிட்டார். அர்ச்சனாவின் கேம் பிளானா இது? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மனங்களில் உள்ள நிலையில், 3வது புரமோவில் அதையும் வச்சி விளாசி உள்ளார் கமல்.

தீப்பொறி பறந்துட்டு இருந்தப்போ
பாசம் கிடைச்சா டக்குன்னு வாங்கி பாக்கெட்ல போட்டுக் கோங்க என பாலாஜிக்கு அட்வைஸ் சொன்ன கமல், நல்லா தீப்பொறி பறந்துட்டு இருந்தப்போ, பாசத்தை காட்டி தண்ணி ஊத்தி அணைச்சி இணைஞ்சிட்டாங்களே.. எனக்கு சந்தோஷமா இருந்தது. ஆடியன்ஸுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியலயே என செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

ரியோவுக்கு எப்படி இருந்தது
மேலும், பாலாஜி முருகதாஸுக்கும் அர்ச்சனாவுக்கும் சண்டை வரும் போதெல்லாம், அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி வந்த ரியோ ராஜுக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு, பாலாஜியை மகனாக மாற்றி பாசத்தை பொழிந்து அர்ச்சனா அக்கா டிராக்கை மாற்றியது ரியோவுக்கு எப்படி இருந்தது என்றும் மக்களின் மனசாட்சியாக கேட்டுவிட்டார்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது
பாலாஜி முருகதாஸும் அர்ச்சனாவும் இணைந்தது இருவரது கேம் பிளான் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டு தான் கமல் இப்படி பேசி உள்ளார் என்றும் இது தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இன்னைக்காவது தரமான சம்பவம் நிச்சயம் இருக்குமா? ஆரி பற்றி பேசுவாரா கமல் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











