மேடையில் கையை தட்டிவிட்ட கமல்.. அவமானப்படுத்தப்பட்டாரா ஏ.ஆர்.ரஹ்மான்?என்ன நடந்தது!
சென்னை: மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்மான அளவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் தக் லைஃப் படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் சிம்பு.த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று நிறுவனங்களும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 5ந் தேதி வெளியாக உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கண் கலங்கிய சிம்பு: இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, 25ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்தது, கோலாகலமாக நடந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, சின்ன வயதில் மற்ற குழந்தைகள் விளையாடும் போது, நான் மட்டும் சினிமா, படிப்பு என பிசியாகவே இருப்பேன். அப்போதெல்லாம், என்னுடைய அப்பா, அம்மா மேல கோபம் வரும், என்ன மட்டும் இப்படி கஷ்டப்படுத்துறாங்க என நினைத்து பல முறை அழுது இருக்கிறேன். ஆனால், இன்னைக்கு அவங்களால் தான், நான் கமலஹாசனுடன் நடிச்சி இருக்கிறேன். என்னை நடிகனாக்கியது என்னுடைய அப்பா அம்மா தான் அவர்களுக்கு என் நன்றி என கண்கலங்கி பேசி இருந்தார்.

இதுக்குத்தான் அரசியலுக்கு வந்தேன்: அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், நடிகர் அசோக்செல்வன் என்னை கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்து ரசித்தேன் என்றார். தனது கடைக்கோடி ரசிகனைக்கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக அரசியலுக்கு வந்ததாகவும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வரவில்லை. 40 வருடம் ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதை, நான் மெல்ல மெல்ல செய்து வருகிறேன் என்றார். மேலும், படம் குறித்து, த்ரிஷாவின் அழகு, சிம்புவின் திறமை, ஜோஜூ ஜார்ஜ்ஜின் நடிப்பு என பல விஷயம் குறித்து பேசி இருந்தார்.
மாறிய கமலின் முகம்: தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜோஜூ ஜார்ஜ், மணிரத்னம் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக குழுவாக போட்டோ எடுக்கப்பட்டது. அப்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கமல் தோளில் கை போட்டுள்ளார். இதனால், கமலின் முகம் திடீரென மாறி, ஏ.ஆர்.ரஹ்மானின் கையை பிடித்து தள்ளிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கமலின் முகத்தில் கோவம் நன்றாக தெரிகிறது. ஏன் இப்படி கமல் நடந்து கொண்டார் என்றும், ஏ.ஆர்.ரஹ்மானை கமல் அசிங்கப்படுத்தி விட்டார் என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











