சில நேரங்களில் சில மனிதர்கள்... புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்த கமல்

சென்னை : கடந்த 1977ல் வெளிவந்து கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

வாரப்பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.

தற்போது இதே தலைப்பில் அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை நடிகர் கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

1977ல் வெளியான படம்

1977ல் வெளியான படம்

நடிகை லஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ் உள்ளிட்டவர்களின் தேர்ந்தெடுத்த நடிப்பில் கடந்த 1977ல் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். ஒரு சில படைப்புகள் நம்மை தூங்கவிடாமல் செய்யும். அத்தகைய கலைப்படைப்பாக வெளிவந்து பல்வேறு விருதுகளை இந்த படம் தட்டிச் சென்றது.

நாவலாகவும் உருவாக்கம்

நாவலாகவும் உருவாக்கம்

எழுத்தாளர் ஜெயகாந்தன் வாரப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய அக்கினி பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது சில நேரங்களில் சில மனிதர்கள். முன்னதாக கங்கா எங்கே போகிறாள் என்ற நாவலாகவும் இந்த கதையை ஜெயகாந்தன் படைத்திருந்தார்.

செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள்

செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள்

நாவலில் இருக்கும் உயிர்நாடி திரைக்கதையில் கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம். ஆனால் அதிலும் இந்த படம் வெற்றி பெற்றது. கங்கா கதாபாத்திரமாகவே படத்தில் வாழ்ந்திருந்தார் லஷ்மி. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படத்தில் செதுக்கப்பட்டிருந்தன.

அறிமுகம் செய்த கமல்

அறிமுகம் செய்த கமல்

இந்நிலையில் தற்போது அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் அதே தலைப்பில் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், படம் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளார். படம் குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X