கமல் ஒரு மேதை.. நண்பன்னு சொல்ல கூடாது.. கன்னத்தில் போட்டுக்கொண்ட Maddy!
சென்னை : தமிழ் திரையுலகில் மேடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மாதவன் இன்றும் ரசிகர்கள் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அலைபாயுதே படத்தில் தொடங்கி சென்ற ஆண்டு வெளியான மாறா திரைப்படம் வரை ரசிகர்கள் மனதில் இவரும், இவரது திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளது.
தமிழில் தனது முதல் படமான அலைபாயுதே படத்தின் மூலம் பல ரசிகர்களை ஏற்படுத்திக்கொண்டார் நடிகர் மாதவன். ரசிகர்களை விட இவருக்கு ரசிகைகளே அதிகம். இவரது துரு துரு நடிப்பும் எதார்த்தமான பேச்சும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

அனைத்தும் ஹிட் தான்
அலைபாயுதே படத்திற்கு பிறகு என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மாதவன். அது மட்டும் இல்லாமல் ரன், அன்பே சிவம், நளதமயந்தி, பிரியமான தோழி, ஜேஜே, ஆயுத எழுத்து போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் மாதவன். தற்போது நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, தயாரித்த ராக்கெட்ரி திரைப்படம் ஜூலை மாதம் வெளிவர உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் இப்படம் வெளிவர உள்ளது.

சயின்டிஸ்ட் படம்
ராக்கெட்ரி திரைப்படத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்துள்ளார். இது இஸ்ரோ சயின்டிஸ்ட் ஆன நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்த படத்தில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்கெட், சயின்டிஸ்ட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஏபிஜே அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் குல்ஷன் குரோவர் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேப்போல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாருக்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரொம்ப நாள் ஆச்சி
இவர் நடித்த இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளிவந்தது. அதன் பிறகு சிறப்பு தோற்றத்தில் சில படங்களில் நடித்திருந்தார் மாதவன். கடைசியாக இவர் நடித்த மாறா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது ஆனால் அப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. அதனால் மாதவனை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

பக்தன் தான், மேதை அவர்
கமல் ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல் ஹாசனைப் பற்றி மாதவன் பேசிய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. அதில் மாதவன் பேசி இருப்பதாவது," நான் கமலின் தீவிர பக்தன், ரசிகன். நண்பன் என்று சொல்லக்கூடாது, அவருடன் இணைந்து அன்பே சிவம், நளதமயந்தி, மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்துள்ளேன். கமல் ஹாசன் ஒரு மேதை.. நண்பன் என்றெல்லாம் சொல்ல முடியாது. இன்றும் அவருடன் பழகும் பொழுது ஒரு ஃபேன்பாய் ஆகத்தான் பழகுவேன். அவரை நண்பன் என்று சொன்னால் அது மிகப்பெரிய தவறு என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் நடிகர் மாதவன்.

பாராட்டி மகிழ்ந்தார்
கமல் ஹாசன் இடத்தில் நான் ராக்கெட்ரி படத்தின் டிரைலரை போட்டு காட்டும் பொழுது, இது நீ எழுதி, இயக்கிய படமா மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று என்னை பாராட்டினார், ஆச்சரியமாக என்னை பார்த்தார். நான் தான் டைரக்ட் செய்தேன் என்று வெட்கப்பட்டேன். வெரிகுட் என்று அவர் என்னை பாராட்டினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அது மாட்டும் இல்லாமல் வசூல் சாதனை படைத்து வரும் விக்ரம் திரைப்படத்தை பார்த்து நான் வியந்தேன். கமல் ஹாசனின் திறமைகளை கொண்டாட வேண்டும் என்று கமல் ஹசனனை புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் மாதவன்.


Click it and Unblock the Notifications











