twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்.காமன் டீபியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

    |

    சென்னை: களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் சிறு குழந்தையாக நடிக்க ஆரம்பித்த கமல்ஹாசன் இன்று வரை, பல மொழிகளில் தரமான படங்களில் நடித்தும், தயாரித்தும், இயக்கியும் இந்திய அளவில் பலராலும் வியந்து பார்க்க கூடிய மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    உலகத்தரத்தில் இந்திய சினிமாவை கொண்டு சென்ற வெகு சில இந்திய பிரபலங்களில் மிக முக்கியமானவராக கமல்ஹாசன் இருந்துவரும் வேளையில் இப்பொழுது அரசியலிலும் இறங்கியுள்ளார்.

    இவரின் படங்களுக்கு மட்டும் அல்லாமல் இவரது பேச்சுக்கும் அடிமையாக உள்ள பல கோடி ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ள நிலையில் நவம்பர் 7 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி உலகைச் சேர்ந்த பலரும் காமன் டீபியை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல்ஹாசனின் 292வது படத்தின் டைட்டிலை பிறந்தநாள் பரிசாக வெளியாக உள்ளது.

    வியக்கும் கலைஞன்

    வியக்கும் கலைஞன்

    இந்தியாவிலேயே பலரும் வியந்து பார்க்க கூடிய சினிமாவில் அனைத்து கலைகளையும் கரைத்துக் குடித்த சகலகலா வல்லவராக வலம் வந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனை தமிழ் ரசிகர்கள் ஆண்டவரே என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

    புதிய தொழில்நுட்பம்

    புதிய தொழில்நுட்பம்

    உலகத்தரத்தில் இந்திய சினிமாவை கொண்டு சென்ற வெகு சில இந்திய திரைப் பிரபலங்களில் மிக முக்கியமானவராக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடிய புதிய யுத்திகளையும், தொழில்நுட்பத்தையும் இந்திய திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி ஹாலிவுட் தரத்திற்கு இந்திய படங்களின் தரத்தையும் உயர்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    4 தேசிய விருதுகள்

    4 தேசிய விருதுகள்

    இவர் நடித்த எண்ணற்ற திரைப்படங்கள் ஆஸ்கரின் கதவுகளை பலமாக தட்டி வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு நடிகராலும் யாராலும் முறியடிக்க முடியாத பல்வேறு சாதனைகளை சினிமாவில் நிகழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் இதுவரை சிறந்த நடிகருக்கான நான்கு முறை தேசிய விருது பெற்று இந்தியாவில் பலராலும் விரும்பக்கூடிய மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    பெருமைக்கு சொந்தக்காரர்

    பெருமைக்கு சொந்தக்காரர்

    கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது என எண்ணற்ற விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த படைப்பாளராகவும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது என எண்ணற்ற விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த படைப்பாளராகவும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    சிறந்த படைப்பு

    சிறந்த படைப்பு

    புதிய தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே மருதநாயகம் என்ற ஆகச் சிறந்த படைப்பை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க தயாரான கமல்ஹாசன் குருதிப்புனல் படத்தின் மூலம் முதல் டால்பி சவுண்ட் என்ற ஒன்றை முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

    வித்தியாசம் காட்டி

    வித்தியாசம் காட்டி

    இந்தியாவில் படப்பிடிப்புக்கு பின்னர் டப்பிங் செய்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்த காலத்தில் ஹேராம் திரைப்படத்திற்கு டப்பிங் செய்யாமல் ரியல் ஆடியோ ரெக்கார்டிங் என்ற முறையில் படபிடிப்பை நடத்தி முடித்து காட்டிய ஜித்தன் இவர். நடிகர்கள் பலரும் 2 அதிகபட்சம் 5 வேடங்களில் நடிக்கவே திணறிக் கொண்டிருக்கும் நிலையில் தாசவதாரம் திரைப்படத்தில் பத்து கதாபாத்திரங்களை ஒன்றுக்கு ஒன்று எந்த ஒரு சாயலும் இல்லாமல் நடை உடை பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.

    வெற்றிக் கொடி

    வெற்றிக் கொடி

    மேலும் சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் மற்றும் விஸ்வரூபம்-2 உள்ளிட்ட திரைப்படங்கள் ஹாலிவுட் தரத்தில் இந்திய சினிமாவில் பலரும் முயற்சி செய்ய தயங்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்தும் காட்டியவர். இவ்வாறு திரைத்துறையில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கமலுக்கு நிகர் கமல் மட்டுமே என்ற நிலையில் இப்பொழுது அரசியலிலும் வெற்றிக் கொடியை பறக்க விட மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க வீறுநடை போட்டு வருகிறார்.

    கலையுலக

    கலையுலக "ஆண்டவரே"

    கமல்ஹாசனை காதல் மன்னன், உலக நாயகன் என பலரும் அழைத்து வரும் நிலையில் ரசிகர்கள் இவரை கலையுலக "ஆண்டவரே" என செல்லமாக அழைத்து வருவதோடு சாதாரண மக்களும் இவரை ஆண்டவர் கமல்ஹாசன் என அழைக்கின்றனர்.

    மாலை வெளியீடு

    மாலை வெளியீடு

    தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் பெங்காலி என எக்கச்சக்கமான மொழித் திரைப்படங்களில் எண்ணற்ற வேடங்களில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்த கமல்ஹாசன் மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் பாகம் இரண்டில் விறுவிறுப்பாக பணியாற்றி வரும் அதே சமயம், தமிழில் இளம் இயக்குனர்களில் அதிரடி காட்டி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய திரைப்படத்தின் டைட்டிலை பிறந்தநாள் பரிசாக இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர்.

    பிரபலங்கள் காமன் டீபி

    பிரபலங்கள் காமன் டீபி

    இவ்வாறு சாதனைக்கு மேல் சாதனை செய்து தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையும் உலகத் தரத்தில் கொண்டு சென்ற பெருமைக்குச் சொந்தக்காரரான உலக நாயகன் கமல்ஹாசன் நவம்பர் 7 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை யொட்டி நடிகர் பார்த்திபன், நடிகை ராதிகா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இந்தியாவின் பல பிரபலங்கள்
    காமன் டீபியை வெளியிட்டு
    இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் உலகெங்கும் உள்ள இவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இணையதளத்தில் வாழ்த்துக்களைக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Kamal Haasan is Celebrating his 66th Birthday: Fans, Celebrities wishes for the megastar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X