அதிக சம்பளம் வாங்கும் நடிகர் கமல்ஹாசன்.. அப்போ விஜய் லேதா? புள்ளி விபரத்துடன் சொன்ன பிரபலம்

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் மேடைகளில் தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கெரியரின் உச்சத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறுகிறார். அதேபோல், மிகப்பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறுகிறார். விஜய் கூறுவது 100க்கு 100 சதவீதம் உண்மை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவரான யூகி சேது அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவது நடிகர் கமல்ஹாசன் தான் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் என்பது பொதுவான ஒரு கருத்தாக இருக்கிறது. இருவரும் ஒரு படத்திற்கு சுமார் ரூபாய் 200 கோடிகள் சம்பளமாக வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Kamal Haasan Is the Highest Paid Actor in Indian Cinema Yugi Sethu Shares Surprising Salary Calculation

இப்படி இருக்கையில் யுகி சேது அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் தான் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறார் என்று தெரிவித்துள்ளார். அதாவது கல்கி கிபி 2898 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு சம்பளமாக ரூபாய் 150 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கால்ஷீட்டாக மொத்தம் 20 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் கொடுத்துள்ளார்.

ஒரு நாளைக்கு: ஆனால் அவரது போர்ஷனை 10 நாளில் முடித்துக் கொடுத்துவிட்டார். அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு ரூபாய் 15 கோடிகள் சம்பளம் கணக்காக வருகிறது என்று கூறியது மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவில் ஒரு நாளைக்கு ரூபாய் 15 கோடிகள் சம்பளமாக வாங்கிய ஒரே நடிகர் கமல்ஹாசன் தான் என்று தெரிவித்தார்.

Kamal Haasan Is the Highest Paid Actor in Indian Cinema Yugi Sethu Shares Surprising Salary Calculation

அதிக சம்பளம்: விஜய் ஒரு படத்திற்கு சுமார் 90 நாட்களில் இருந்து 120 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்கிறார். அதேபோல் ரஜினியும் 120 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்கிறார். இவர்கள் இருவரும் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ரூபாய் 200 கோடிகள் சம்பளமாக வாங்குவதை கணக்காக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு ரூபாய் 1.66 கோடிகள் தான் வருகிறது. ஆனால் கமல்ஹாசனுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 15 கோடிகள் வருகிறது. இதைக் கணக்கிட்டு பார்த்தால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் என்று நடிகர் யூகி சேது சொல்வது சரிதான் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X