அட இது செமயா இருக்கே.. இளையராஜா பயோபிக்கில் இணையும் கமல் ஹாசன்.. சம்பவம் உறுதி

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளையராஜா, கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்போதே இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் இப்படத்தில் கமல் ஹாசன் இணைந்திருக்கிறார்.

இளையராஜா என்ற பெயரை தமிழர்கள் யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துவரும் அவரை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். அவரது இசைதான் காலங்காலமாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லிவருகிறது. அடுத்த தலைமுறைக்கும் கண்டிப்பாக இளையராஜாவின் இசை தாலாட்டு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அளவுக்கு அவரது இசையின் தாக்கம் தமிழ் சமூகத்தில் கலந்திருக்கிறது.

Kamal Haasan is writing the screenplay for Ilayaraja s biopic

பயோபிக்: இளையராஜா இப்போது இருக்கும் உயரம் எளிதில் வந்ததில்லை. பல அவமானங்கள், புறக்கணிப்புகளை கடந்துதான் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக இளையராஜாவின் வெற்றி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது வாழ்க்கையை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தியாக அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இளையராஜா: அதன்படி மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். முதலில் பால்கி இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட சூழலில், கேப்டன் மில்லர் படத்தில் ஏற்பட்ட புரிதல் காரணமாக தனுஷின் சிபாரிசின் பேரில் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தின் இயக்குநராக கமிட் செய்யப்பட்டார். படத்துக்கு இளையராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் சினிமாவாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடக்க விழா: படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இளையராஜா, தனுஷ், அருண் மாதேஸ்வரன், கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன், கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இளையராஜா பற்றியும்; எடுக்கவிருக்கும் படம் பற்றியும் நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் பேசினார்கள். நேற்று நிகழ்ச்சி நடந்த கையோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இணைந்த கமல் ஹாசன்: நிகழ்ச்சியில் பேசிய கமல் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று அருண் மாதேஸ்வரனுக்கு அறிவுரையும் வழங்கினார். இந்நிலையில் இளையராஜா படத்தில் கமல் ஹாசனும் இணைந்திருக்கிறார். தன்னை வைத்து பல படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவிற்க், 'அபூர்வ சிங்கீதம்' என்ற நிகழ்ச்சியை கடந்த சில நாட்களாக ஒருங்கிணைத்திருக்கிறார் கமல் ஹாசன். நான்காம் நாள் நிகழ்ச்சியில் கமல், இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய கமல் ஹாசன், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு நான் திரைக்கதை எழுதுகிறேன் என்று குறிப்பிட்டார். இது அரங்கத்தில் பெரும் கரவொலியை எழுப்பியது. இளையராஜாவின் நெருங்கிய நண்பர் கமல் ஹாசன். அதேபோல் திரைக்கதை எழுதுவதிலும் கைதேர்ந்தவர். இப்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு கமல் திரைக்கதை எழுதுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X