twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பார்த்த கைலாஷ் சத்தியார்த்தியின் வாழ்க்கை ஆவணப்படம் - ஸ்டாலின் மருமகளுக்கு விருது

    அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியார்த்தியின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தி பிரைஸ் ஆஃப் ப்ரீ என்கிற பெயரில் டெரக் டோனன் என்பவர் இயக்கியுள்ளார்.

    |

    சென்னை: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியார்த்தியின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் சென்னையில் திரையிடப்பட்டது. இந்த படம் திரையிடப்பட்ட விழாவில் ஸ்டாலின் மருமகள் கிருத்திகாவிற்கு நடிகர் கமல் விருது கொடுத்தார்.

    டாக்டர் கைலாஷ் சத்தியார்த்திக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவருடடைய வாழ்க்கை வரலாற்றை தி பிரைஸ் ஆஃப் ப்ரீ என்கிற பெயரில் ஆவண படமாக எடுத்துள்ளனர். டெரக் டோனன் என்பவர் இயக்கியுள்ளார்.

    இந்தப்படம் யு டுயூப்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. பல விருதுகளையும் இந்தப்படம் பெற்றுள்ளது.

    Kamal Haasan, Kailash Satyarthi attend screening of documentary

    இந்த படம் சென்னையில் நடைபெற்ற விழாவில் திரையிடப்பட்டது. இதற்கான விழாவில் கைலாஷ் சத்தியார்த்தி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சத்தியார்த்திக்கு மேடையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கைலாஷ் சத்தியார்த்தியும் கமல்ஹாசனும் 81நிமிடங்கள் முழு படத்தையும் ரசித்து பார்த்தனர்.

    டாக்டர் கைலாஷ் சத்தியர்த்தி குழந்தைகளுக்காக அவரது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர் child-friendly world மூலம் 88,000 குழந்தை தொழிலாளர்களை காப்பாற்றியுள்ளார். இவர் ஜூன் 12 அன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக நாளாக அறிவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த விழாவில் முக ஸ்டாலின் மருமகளும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகாவுக்கு நடிகர் கமல் விருது கொடுத்து கவுரவித்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது. சினிமா மற்றும் சமூக சேவையில் பல்வேறு சாதனை படைத்ததாக கூறி கிருத்திகாவுக்கு நடிகர் கமல் கேடயம் மற்றும் விருது கொடுத்தார். பெண் சாதனையாளர் என்கிற விருது கிருத்திகாவுக்கு கொடுக்கப்பட்டது.

    English summary
    Makkal Needhi Maiam Chief, Kamal Haasan attended the screening of documentary in Tamil Nadu’s Chennai. Nobel Laureate Kailash Satyarthi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X