Don't Miss!
- Finance
இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!
- News
ஒரே பதற்றமா இருக்கு! அரசு விழாவில் தடுமாறிய கரூர் மேயர் கவிதா கணேசன்! கண் சிவந்த செந்தில் பாலாஜி!
- Automobiles
மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வெற்றி முத்தம்.. விஜய்சேதுபதி, உதயநிதி, அனிருத், லோகேஷுக்கு கமலின் லைஃப் டைம் செட்டில்மெண்ட்!
சென்னை: விக்ரம் வெற்றி விழாவில் கறி விருந்து வைத்தது மட்டுமின்றி அந்த விழாவில் கலந்து கொண்ட விக்ரம் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் அன்பு முத்தங்களை பரிசளித்துள்ளார் கமல்.
லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் பரிசளித்தார். சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் கொடுத்தார் அனிருத், விஜய்சேதுபதிக்கு என்ன கொடுத்தார்? என்கிற கேள்விகள் கிளம்ப அதற்கு அவர்களே தரமான பதில்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், விஜய்சேதுபதி, அனிருத், உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ் என அனைவருக்குமே கமல் கொடுத்த உயர்ந்த பரிசு இதுதான் என புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
80,90-ஸ்
கிட்சை
அலற
வைத்த
இந்த
4
பேய்
படங்கள்
ஒரு
பார்வை...அன்னைக்கு
பயம்
இன்னைக்கு
டிஜிட்டல்
மயம்

விஜய்சேதுபதிக்கே குரு
முத்தம் கொடுப்பதில் விஜய்சேதுபதிக்கு குரு தான் என மீண்டும் நிருபித்துள்ளார் நடிகர் கமல். விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கறி விருந்து கொடுத்தது மட்டுமின்றி அன்பு முத்தங்களையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல்ஹாசன். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உதயநிதிக்கு முத்தம்
கமலையும் யாராலும் மிரட்ட முடியாது என விக்ரம் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே பேசிய உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் படத்தின் ஷேர் 75 கோடியை கடந்து இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையை செய்திருப்பதாக கூறினார். இந்நிலையில், அவருக்கும் கமல் முத்தம் கொடுத்துள்ளார்.

லைஃப் டைம் பரிசு
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், நடிகர் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச், உதவி இயக்குநர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் என பரிசு கொடுத்து வந்த கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், அனிருத்துக்கு ஏன் பரிசு தரவில்லை என கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், அன்பு முத்தங்களை அள்ளித் தந்து லைஃப் டைம் மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

லோகேஷ் ட்வீட்
பல வருடத்திற்கு பிறகு கமல்ஹாசனுக்கு இப்படியொரு வெற்றியை பெற்றுத் தரவே தவம் கிடந்த லோகேஷ் கனகராஜை சரியாக அடையாளம் கண்டு விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்த இடத்திலேயே கமல் வெற்றி பெற்று விட்டார். இந்த போட்டோவை பகிர்ந்து 'We all Love You Sir'என லோகேஷ் கனகராஜ் தற்போது ட்வீட் போட்டதும் ஒட்டுமொத்த கமல் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இந்த புகைப்படத்தை தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

தளபதி 67 அறிவிப்பு
விக்ரம் படத்தின் வெற்றி சந்தோஷம் கொடுக்கிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு தளபதி 67 படத்தின் அப்டேட்டையும் போட்டு விடுங்க லோகேஷ் என விஜய் ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். கமல் ரசிகர்கள், தளபதி 67ஐ முடித்த கையோடு விக்ரம் 3 படத்தையும் ஆரம்பித்து விடுங்க என தங்களது கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.