உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம்.. ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்!

சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு'பாடல் ஆஸ்கர் விருதை வென்றதற்கு நடிகர் கமல்ஹாசன் மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டு நாட்டு பாடலுக்கு மேலும் ஒரு அங்கிகாரமாக ஆஸ்கர் மேடையில் கால பைரவா, ராகுல் சிப்லிகஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட, கலைஞர்கள் நடனம் ஆடினர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு கலைஞர்கள் நடமாடியதை விழாவில் இருந்தவர்கள் உற்சாக கேட்டு ரசித்துவிட்டு எழுந்து நின்று கைதட்டினர்.

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் ரௌத்திரம் ரணம் ருத்ரம் (ஆர்.ஆர்.ஆர்). தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூலை குவித்தது

வசூலை குவித்தது

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்களாக நடித்திருந்தனர். இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி பாராட்டை பெற்றது.

நாட்டு நாட்டு பாடலுக்கு விருது

நாட்டு நாட்டு பாடலுக்கு விருது

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம்

உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன். எம்.எம்.கீரவாணிக்கும், எஸ்.எஸ்.ராஜமவுலிக்கும், ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X